ETV Bharat / bharat

லடாக் மேப் விவகாரம்: எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க ட்விட்டருக்கு உத்தரவு!

டெல்லி: ட்விட்டர் மேப்பில் லடாக் சீன பகுதி என காட்டிய விவகாரத்தில், எழுத்துப்பூர்வ மன்னிப்பு கோர வேண்டும் என ட்விட்டர் நிர்வாகத்திற்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு உத்தரவிட்டுள்ளது.

wittwit
wit
author img

By

Published : Oct 29, 2020, 2:52 PM IST

கடந்த 18ஆம் தேதி ட்விட்டர் நிறுவனத்தின் ஜியோடேக் பதிவு வரைபடத்தில் லடாக், சீனப் பகுதியில் இருப்பதாக காட்டப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து அறிந்த ட்விட்டர் நிறுவனம், சில மணி நேரத்தில் அந்த வரைபடத்தை திருத்தி சரி செய்தது.

இந்நிலையில், தரவு பாதுகாப்பு மசோதா, 2019 தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன் ட்விட்டரின் பிரதிநிதிகள் ஆஜரானார்கள். அப்போது லடாக்கை சீனாவின் ஒரு பகுதியாகக் காண்பிப்பது குறித்து உறுப்பினர்களிடம் சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

அப்போது, நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு விளக்கமளித்த ட்விட்டர் பிரதிநிதிகள், இத்தகைய தவறு மீண்டும் நடைபெறாது என உறுப்பினர்கள் வாய்மொழி மன்னிப்பு கோரியுள்ளனர்.

ஆனால், பிரதிநிதிகளின் விளக்கம் போதுமானதாக இல்லை என கருதிய நாடாளுமன்ற கூட்டுக்குழு, ட்விட்டர் நிர்வாகம் எழுத்துப்பூர்வ மன்னிப்பு கோரவும், இதுதொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.