ETV Bharat / bharat

இந்தியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: முக்கிய நிகழ்வுகள் உடனுக்குடன் - Trump's India Visit

Modi - Trump
Modi - Trump
author img

By

Published : Feb 24, 2020, 11:16 AM IST

Updated : Feb 25, 2020, 7:25 AM IST

17:05 February 24

தாஜ்மகாலை பார்வையிடும் ட்ரம்ப்!

ட்ரம்ப் தனது மனைவி மெலனியா ட்ரம்புடன் தாஜ்மகாலை சுற்றி பார்த்துவருகிறார். அவர்களுக்கு தாஜ்மகால் வரலாறு குறித்து விளக்கப்பட்டுவருகிறது. பின்னர், அவர்கள் தாஜ்மகாலுக்கு முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

16:30 February 24

ஆக்ரா வந்த ட்ரம்ப்

சுற்றுலா பயணிகளுக்கு தடை!

ட்ரம்ப், மெலனியா ட்ரம்ப் ஆகியோர் தாஜ்மகாலுக்கு செல்வதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

16:16 February 24

ஆக்ரா வந்தடைந்தார் ட்ரம்ப்!

தாஜ்மகாலை காண்பதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அகமதாபாத்திலிருந்து ஆக்ராவிற்கு விமானம் மூலம் சென்றார். உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் அவரை வரவேற்றனர். பாரம்பரிய கலைஞர்கள் சார்பில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

14:52 February 24

ட்ரம்ப் உரை

சச்சின், கோலியை புகழ்ந்த ட்ரம்ப்!

நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், "இந்தியாவை அமெரிக்கா நேசித்து மதிக்கிறது. இந்திய மக்களுக்கு அமெரிக்கா எப்போதும் நம்பிக்கைக்குரிய நாடாக இருக்கும். டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள மிக பெரிய கால்பந்து மைதானத்தில் மோடியை வரவேற்றோம். உலகின் மிக பெரிய கிரிக்கெட் மைதானத்தில் எங்களை இந்தியா வரவேற்றுள்ளது.  

மிக சிறந்த முறையில் அளிக்கப்பட்ட விருந்தினர் உபசரிப்பு தன்மையை எப்போதும் நினைவில் கொள்வோம். எங்கள் மனதில் இந்தியாவுக்கு தனியாக ஒரு இடமுண்டு. தேனீர் விற்பனையாளராக மோடி தனது வாழ்க்கையை தொடங்கினார். அனைவரும் அவரை விரும்புகிறார்கள். ஆனால், அவர் கடினமானவர் என்பதை நான் சொல்லி கொள்ள விரும்புகிறேன். மோடி குஜராத்தின் பெருமை மட்டுமல்ல. கடின உழைப்பு, ஈடுபாடு ஆகியவற்றின் எடுத்துக்காட்டாக அவர் விளங்குகிறார். ஒருவர் எப்படி வாழ்க்கையில் உயர வேண்டும் என்பதற்கு மோடியே எடுத்துக்காட்டு.  

தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே, ஷோலே போன்ற பாலிவுட் படங்களை பார்ப்பதிலும் பாங்ரா நடனம் நடனத்தை கண்டு ரசிப்பதிலும் உலகமே மகிழ்ச்சி கொள்கிறது. விராட் கோலி, சச்சின் போன்ற கிரிக்கெட் வீரர்களை இந்தியர்கள் கொண்டாடுகிறார்கள்.  

இரு நாடுகளும் பாதுகாப்பு துறையில் மேற்கொண்டுள்ள ஒத்துழைப்பால், உலகின் மிகச் சிறந்த ராணுவ உபகரணங்களை இந்தியாவுக்கு அமெரிக்கா அளிக்கவுள்ளது. மிகச் சிறந்த ஆயுதங்களை நாங்கள் தயாரிக்கிறோம். இப்போது, இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்கிறோம்.  

இஸ்லாமிய பயங்கரவாதத்திடமிருந்து மக்களை காப்பாற்றுவதில் இருநாடுகளும் சேர்ந்துள்ளன. எனது நிர்வாகத்தின் கீழ் முழு அமெரிக்க படைகள் பயன்படுத்தப்பட்டு ஐஎஸ் அமைப்பு அழிக்கப்பட்டது. ஐஎஸ் அமைப்பு 100 விழுக்காடு அழிக்கப்பட்டுள்ளது. 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தில் நாளை இரு நாட்டு பிரதிநிதிகள் கையெழுத்திடவுள்ளனர். ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை இந்திய படைகளுக்கு அளிக்கப்படவுள்ளது. 

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இரு நாடுகளும் ஈடுபாடு கொண்டுள்ளது. இதற்காகதான், நான் அதிபராக பொறுப்பெற்ற பின் பாகிஸ்தான் நாட்டுடன் இணைந்து பணியாற்ற தொடங்கினேன்" என்றார். 

14:16 February 24

மோடி உரை

வரலாறு படைக்கப்பட்டுள்ளது - மோடி பெருமிதம்!

நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் பேசிய மோடி, "வரலாறு மீண்டும் படைக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன். 5 மாதங்களுக்கு முன்பு, அமெரிக்க பயணத்தை ஹவுடி மோடி நிகழ்ச்சியுடன் தொடங்கினேன். நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியுடன் இந்திய பயணத்தை ட்ரம்ப் தொடங்கியுள்ளார். உலகின் பெரிய ஜனநாயகம் நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது. உங்களை வரவேற்பதில் ஒட்டுமொத்த நாடும் உற்சாகம் கொள்கிறது.  

இந்த நிகழ்ச்சியின் பெயருக்கு ஆழமான பொருள் உண்டு. 'நமஸ்தே’ என்ற வார்த்தை உலகின் பழமையான மொழியான சமஸ்கிருதத்திலிருந்து தழுவப்பட்டது. மனிதர்களுக்கு மட்டும் மரியாதை செலுத்தாமல் உள்ளிருக்கும் தெய்வீகத்தன்மைக்கும் மரியாதை செலுத்துவதற்கு நமஸ்தே என்பது பொருள்.  

இந்திய, அமெரிக்கா நாடுகளுக்கிடையே சிறப்பான நெருங்கிய உறவு உள்ளது. சுதந்திரத்தை போதிக்கும் நாடாக அமெரிக்கா விளங்குகிறது. உலகம் ஒரு குடும்பம் என்பதை இந்தியா போதிக்கிறது. சுதந்திர தேவி சிலையால் அமெரிக்காவுக்கு பெருமை. சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமைக்கான சிலையால் இந்தியாவுக்கு பெருமை.

விழுமியங்கள், கொள்கைகள், கண்டுபிடிப்புகள், வாய்ப்புகள், சவால்கள் என பலவற்றை இரு நாடுகள் பகிர்கிறது" என்றார். 

13:43 February 24

குண்டு தொலைக்காத மேடையில் மோடி, ட்ரம்ப்

’நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி தொடங்கியது

அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் தேசிய கீதம் ஒலிக்கபெற்றதைத் தொடர்ந்து, ’நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி தொடங்கியது. 'பாரத் மாதா கீ ஜெய்' என முழக்கமிட்டபடி தன் உரையை மோடி தொடங்கினார். குண்டு தொலைக்காத மேடையில் ட்ரம்ப், மெலனியா ட்ரம்ப் ஆகியோர் அமர்ந்துள்ளனர். 

13:27 February 24

அமித் ஷாவை ட்ரம்புக்கு அறிமுகம் செய்துவைத்த மோடி

சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நடைபெறவுள்ள 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ட்ரம்ப், மெலனியா டரமப், ஆகியோர் மொடீராவுக்கு சென்றனர். அங்கிருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பிரதமர் மோடி ட்ரம்புக்கு அறிமுகம் செய்து வைத்தார். 

13:00 February 24

பார்வையாளர் பதிவேடு
பார்வையாளர் பதிவேடு

மோடிக்கு நன்றி தெரிவித்த ட்ரம்ப்

சபர்மதி ஆசிரமத்தில் வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் பதிவேட்டில், அருமையான வரவேற்பை அளித்த நண்பர் மோடிக்கு நன்றி என ட்ரம்ப் எழுதியுள்ளார்.

12:50 February 24

மொடீரா மைதானத்திற்கு புறப்பட்ட ட்ரம்ப்

சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக உலகின் மிக பெரிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்க ட்ரம்ப் புறப்பட்டார். 

12:42 February 24

விருந்தினர் பதிவேட்டில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்

பின்னர், தீயதை பார்க்காதே, தீயதை கேட்காதே, தீயதை பேசாதே என்ற பொன்மொழி உணர்த்தும் குரங்கு பொம்மைகளை அவர் பார்வையிட்டார். இதையடுத்து, ட்ரம்ப்புக்கு ஆசிரமத்தை மோடி சுற்றி காட்டினார். இறுதியாக, வருகை பதிவேட்டில் அவர் கையெழுத்திட்டார். 

12:36 February 24

ட்ரம்ப்
ட்ரம்ப்

சபர்மதி ஆசிரமத்தில் வைக்கப்பட்ட காந்தியின் ராட்டையை ட்ரம்ப் நூற்றார். 

12:27 February 24

சாலையின் இரு பக்கங்களிலும் நின்று கொண்டிருந்த மக்கள் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, சபர்மதி ஆசிரமத்திற்கு சென்ற ட்ரம்ப்பை இந்திய பிரதமர் மோடி வரவேற்றார். அங்கு வைக்கப்பட்ட காந்தியின் புகைப்படத்திற்கு இருவரும் சேர்ந்து நூல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

12:13 February 24

சாலை வழியாக செல்லும் ட்ரம்ப்

விமான நிலையத்திலிருந்து சபர்மதி ஆசிரமத்திற்கு ட்ரம்ப் புறப்பட்டார். 

11:58 February 24

ட்ரம்ப் இந்தியா வந்தடைந்தார்

இந்தியா வந்தடைந்தார் ட்ரம்ப்!

அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் ட்ரம்ப், மெலனியா ட்ரம்ப் ஆகியோர் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். பிரதமர் மோடி அவர்களை வரவேற்றார். பாரம்பரிய கலைஞர்கள் சார்பில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுவருகிறது. 

11:52 February 24

ட்ரம்ப்பின் மகள் இவங்கா இந்தியா வந்தடைந்தார்.

11:40 February 24

ட்ரம்ப் விமானம்
ட்ரம்ப் விமானம்

ட்ரம்ப்பின் விமானம் இந்தியாவில் தரையிறங்கியது!

அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் விமானம் அகமதாபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

11:38 February 24

65 மில்லியன் குஜராத்திகள் சார்பில் ட்ரம்பை வரவேற்கிறேன் - குஜராஜ் முதலமைச்சர்

65 மில்லியன் குஜராத்திகள் சார்பில் ட்ரம்பை பெருமிதத்துடன் வரவேற்கிறேன் என குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி தனது டவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

11:28 February 24

விருந்தாளிகளே கடவுளுக்கு சமம் - மோடி ட்வீட்!

ட்ரம்பின் ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள மோடி, விருந்தாளிகளே கடவுளுக்கு சமம் என இந்தியில் பதிவிட்டுள்ளார்.

11:18 February 24

மொடீராவில் அமைந்துள்ள உலகின் மிக பெரிய கிரிக்கெட் மைதானத்தின் திறப்பு விழாவுக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் வந்துள்ளனர்.

11:14 February 24

  • हम भारत आने के लिए तत्पर हैं । हम रास्ते में हैँ, कुछ ही घंटों में हम सबसे मिलेंगे!

    — Donald J. Trump (@realDonaldTrump) February 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்தியில் ட்விட் செய்த ட்ரம்ப்!

இந்திய வருகை குறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியா பயணத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் அனைவரையும் ஒரு சில மணி நேரத்தில் சந்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார். 

11:14 February 24

அகமதாபாத்தில் மோடி

அமெரிக்க அதிபர் ட்ரம்பை வரவேற்பதற்காக பிரதமர் மோடி அகமதாபாத் விமான நிலையத்திற்கு சென்றடைந்தார். 

11:11 February 24

இன்று நண்பகல் அகமதாபாத்தில் வந்திறங்குகிறார் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்திய வருகையால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, குஜராத்தில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பயணத்தின் ஒரு அங்கமாக குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு ட்ரம்ப் செல்கிறார். பின்னர், பிரமாண்ட பேரணியில் மோடியும் ட்ரம்ப்பும் பங்கேற்கின்றனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "உங்கள் வருகையை நோக்கி இந்தியாவே காத்துக் கொண்டிருக்கிறது. உங்களின் பயணம் இரு நாட்டு உறவுகளையும் மேம்படுத்தும். அகமதாபாத்தில் உங்களை விரைவில் சந்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Last Updated : Feb 25, 2020, 7:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.