ETV Bharat / bharat

இந்தியாவில் அமொிக்க பொருட்களின் வர்த்தக வரி அதிகரிப்பு : டிரம்ப் குற்றச்சாட்டு - modi

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்கப் பொருட்களின் வர்த்தக வரி கட்டணங்களை இந்தியா உயர்த்தியுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாதது உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார்.

பழிவாங்கும் விதமாக இந்தியா
author img

By

Published : Jun 27, 2019, 4:43 PM IST

Updated : Jun 27, 2019, 4:58 PM IST

ஜப்பானில் நடக்க இருக்கும் ஜி -20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு நடைபெற இருக்கிறது. பொதுத் தேர்தலில் பாஜகவின் பிரமாண்டமான வெற்றிக்கு பிறகு மோடியுடனான அவரது முதல் சந்திப்பு இதுவாகும்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் 'இந்தியா அமொிக்க பொருட்கள் மீது வர்த்தக வரி கட்டணங்களை சில காலங்களாக அதிகரித்து வந்தது. இந்நிலையில் மறுபடியும் வர்த்தக வரி கட்டணங்களை அதிகரித்தது எற்று கொள்ள முடியாதது. எனவே உடனடியாக அமொிக்க பொருட்கள் மீது உள்ள கட்டணங்களைக் திரும்பப் பெற வேண்டும் என்று மோடிக்கு வலியுறுத்தியுள்ளார்.

Trump tweet about american products price hike
டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது

சிறிது நாட்களுக்கு முன்பு அமொிக்காவின் 28 பொருட்களின் வர்த்தக கட்டணங்களை இந்தியா அதிகரித்துள்ளது. இச்செயலானது அமொிக்கா கடந்த ஜூன் 1ஆம் தேதி இந்தியாவுடனான நீண்டகால வர்த்தக சலுகைகளை திரும்பப்பெற்றதால் இதனை பழிவாங்கும் செயலாகவே அமொிக்கா பார்க்கிறது. ஆனால் மற்ற வளர்ந்து வரும் நாடுகளை பார்க்கும்போது இந்த கட்டண அதிகரிப்பு சாதாரணம்தான் என்று இந்தியா தரப்பில் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த குற்றச்சாட்டானது அமொிக்க செயலாளர் மைக் பாம்பியோவின் இந்திய பயணத்தில் பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் ஆகியோர் சந்தித்த பின்பே டிரம்ப் ட்விட் செய்த்துள்ளார். இச்சந்திப்பில் இந்தியா வர்த்தக தடைகளைக் குறைக்க வேண்டும், நியாயமான கட்டணங்களை வைத்துவிட்டால் இந்தியாவில் உயர்தர வேலைகளை உருவாக்குவதற்கான சாத்தியங்கள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ,பிரதமர் மோடி சந்திப்பானது வர்த்தகம், பொருளாதார பிரச்சினைகள் பலவற்றில் இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு முடிவு கட்டும் விதமாகவும் இருக்கலாம் என கருதப்படுகிறது.

Last Updated : Jun 27, 2019, 4:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.