ETV Bharat / bharat

டிரம்பை வரவேற்க ஆக்ரா, தாஜ்மஹாலைச் சுற்றி பாதுகாப்பு அதிகரிப்பு

author img

By

Published : Mar 10, 2020, 9:46 AM IST

வாழ்த்துச் செய்திகளைக் கொண்ட பெரிய விளம்பரப் பலகைகள் முதல் அமெரிக்க மற்றும் இந்தியக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட தெரு ரவுண்டானாக்கள் வரை, ஆக்ரா அதிபர் டொனால்ட் டிரம்பை திங்களன்று வரவேற்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கிடையே காத்திருக்கிறன.

Trump Agra
Trump Agra

அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்ட மோட்டேரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ட்ரம்ப் 'பிரதமர் நரேந்திர மோடியுடன் கூட்டாக கலந்து கொள்ளும் "நமஸ்தே டிரம்ப்" நிகழ்ச்சிக்குப் பிறகு திங்கள்கிழமை மாலை ஆக்ராவுக்கு வரவுள்ளார்.

நகர நிர்வாகம் அனைத்தும் நாளின் மகத்தான நிகழ்வுக்காக தயார் நிலையில் உள்ளது மற்றும் 'ஆக்ராவின் சிறந்த முகத்தை' வழங்குவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் உள்ளன.

ஆக்ராவின் பிரதேச ஆணையர் அனில் குமார் கூறுகையில், டிரம்ப் மாலையில் கேரியா விமானநிலையத்திற்கு வருவார், அங்கு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 350 கலைஞர்கள் அடங்கிய குழுவினர் பாரம்பரிய கருவிகளுடன் இணைந்து பலவிதமான நடனங்களளை ட்ரம்ப் கண்டு களிப்பார்.

வெளி விவகாரத் துறை அமைச்சகத்தால் ஞாயிறன்று வெளியிடப் பட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதியின் வருகை நிரலின்படி, டிரம்ப் திங்கள்கிழமை மாலை 4:45 மணிக்கு ஆக்ரா விமானப்படை நிலையத்திற்கு வந்து சேர்வார். தாஜுக்குச் சென்ற பிறகு, மாலை 6:45 மணிக்கு டெல்லிக்குச் செல்ல விமானத்தில் ஏறுவார்.

விமான நிலையத்திற்கு வரும் அமெரிக்க ஜனாதிபதியை உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் இருவரும் வரவேற்பார்கள் என்று ஆக்ரா மாவட்ட நீதிவான் பிரபு என் சிங் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பைக் குறிக்க டிரம்ப் மோடியுடன் கைகுலுக்கும் படங்களைக் கொண்ட பெரிய விளம்பர பலகைகளும் நகரம் முழுவதும் வைக்கப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் பெரிய கட்அவுட்கள் மற்றும் விளம்பர பலகைகள் விமான நிலையத்தில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

டிரம்ப், விமான நிலையத்திலிருந்து அமர்விலாஸ் ஹோட்டலுக்கும் இடையிலே ட்ரம்ப் வண்டித்தொடர் பயணிக்கப் போகும் உள்ள 13கிலோ மீட்டர் தூரத்திற்குக் குறிப்பாகவும் மேலும் தாஜ் மற்றும் சுற்றியுள்ள பகுதியிலும் நகரம் முழுவதும் பாதுகாப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

"நாளை, மூன்று அடுக்கு பாதுகாப்பு இருக்கும், அமெரிக்க இரகசிய சேவையின் உள் வட்டத்திலும், அதைத் தொடர்ந்து உ.பி. போலிஸ் மற்றும் துணை ராணுவப் படைகள், மற்றும் தேசிய பாதுகாப்புப் படையினர் (என்.எஸ்.ஜி) மற்றும் பி.ஏ.சி ஆகியவையும் உள்ளன. பொலிஸ் கமாண்டோக்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்" என்று சிங் கூறினார், சுமார் 3,000 பணியாளர்கள் நகரத்தைக் காத்து நிற்பார்கள்.

உ.பி. போலீஸ் கமாண்டோக்கள், மற்றும் போலிஸ் மற்றும் துணை ராணுவப் படையினரும் தாஜ்மஹால் வளாகத்திலும் அதைச் சுற்றியும் எச்சரிக்கை மிக்க விழிப்புடன் பாதுகாப்பார்கள்.

"இந்த வழியில், 21 தெரிந்தெடுத்து பகுதிகள் குறிக்கப்பட்டுள்ளன, அங்கு மொத்தம் 3,000 கலைஞர்கள், கிருஷ்ணா லீலா போன்ற விரஜை பகுதி (மதுரா-பிருந்தாவன்) போன்ற பிராந்தியங்களின் வெவ்வேறு கலை மற்றும் கலாச்சார வடிவங்களைக் காண்பிப்பார்கள், ராதா தொடர்பான நிகழ்வுகளை மையக்கருத்தாகக் கொண்ட நடனங்கள் மற்றும் பிராந்தியத்தின் பிற கலாச்சார சொத்துக்களும் காட்சிப் படுத்தப்படும் என்று "குமார் கூறினார்.

ட்ரம்பின் வாகனத் தொடர் நகரம் வழியாக செல்லும்போது வரவேற்கும் வகையில் 15,000 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் அமெரிக்க மற்றும் இந்தியக் கொடிகளை வைத்து வாகனப் பாதையில் வீதிகளில் நிற்பார்கள் என்றும் சிங் கூறினார்.

ஆக்ரா மாவட்ட நீதிவான் கூறுகையில், டிரம்ப் திங்கள்கிழமை மாலை 5:15 மணிக்கு தாஜ்மஹால் வளாகத்திற்கு வந்து முகலாய பேரரசர் ஷாஜகான் கட்டிய 17 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கல்லறைப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் செலவிடுவார்.

"தாஜ்மஹால் வளாகத்தின் கிழக்கு வாசலுக்கு அருகில் அமைந்துள்ள ஓபராய் அமர்விலாஸ் ஹோட்டல் வரை அமெரிக்க ஜனாதிபதியின் வாகனத் தொடர் பயணிக்கும். அங்கிருந்து ஜனாதிபதி, அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் உயர்மட்ட தூதுக்குழுவின் உறுப்பினர்கள் சுற்றுச்சூழல் நட்பான கோல்ஃப் வண்டிகளில் நினைவுச் சின்ன வளாகத்திற்குள் பயணம் செய்வார்கள் என்றும் சிங் கூறினார்.

உச்சநீதிமன்ற உத்தரவுகளின்படி, தாஜ்மஹால் வாயிலிலிருந்து 500 மீட்டருக்குள் பெட்ரோல் அல்லது டீசலால் இயக்கப்படும் வாகனங்கள் அனுமதிக்கப் படுவதில்லை

அவருக்கு முன் பல உலகத் தலைவர்கள் தாஜுக்குச் செல்லும்போது மட்டுமே கோல்ஃப் வண்டிகளில் சவாரி செய்துள்ளனர். எனவே, இது ஒரு சாதாரண விஷயம்தான் " என்று சிங் மேலும் கூறினார்.

வரலாற்று சிறப்புமிக்க நகரமான ஆக்ராவுக்கு ஒரு மேம்பட்ட தோற்றத்தை உருவாக்க வீதிகள் பண்படுத்தப்படுவதும் கருப்பொருள் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்ட சுவர்கள் மற்றும் அற்புதமான தாஜ்மஹாலின் புல்வெளிகளும் சீரமைப்பதும் என்று நிர்வாகம் கடந்த சில நாட்களாக சுறுசுறுப்பாக இயங்குகிறது.

பிரதான நகரத்தில், பழைய சாலைகள் பழுதுபார்க்கப்படுகின்றன, சாலை குறுக்குத் பிரிப்புகள் புதிதாக வர்ணம் பூசப்படுகின்றன, சட்டவிரோத விளம்பரப் பலகைகள் மற்றும் சுவரொட்டிகள் அகற்றப்பட்டன, மற்றும் அதிபர் டிரம்ப் எடுக்கும் பாதையில் சுவர்கள் ஆக்ராவின் விரஜா கலாச்சாரம் மற்றும் கட்டடக்கலை பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் ஓவியங்களால் அலங்கரிக்கப்படுகின்றன.

பல இடங்களில், டிரம்பிற்கு வாழ்த்து தெரிவிக்கும் கலைப்படைப்புகள் கலைஞர்களால் வைக்கப்பட்டுள்ளன, அவரது வருகைக்கு முன்னதாகவே சுவர் ஓவியங்களை முடிப்பதில் மும்முரமாக உள்ளனர். தூசு இல்லை என்பதை உறுதிப்படுத்தத் தொடர்ந்து தண்ணீர் தெளிக்கப்படுகிறது.

நகரின் அழகியல் தோற்றத்தை மேம்படுத்த விக்டோரியன் பாணி விளக்குக் கம்பங்கள் பல பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன.

தாஜ்மஹால் வளாகத்தில், தொழிலாளர்கள் பளிங்கு மற்றும் மணற்கற்களை சுத்தம் செய்வதைக் காண முடிந்தது, அதே நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் திங்களன்று நகரத்தில் பயணக் கட்டுப்பாடுகள் வரவிருப்பதால் முந்தைய நாட்களை நன்றாகப் பயன்படுத்தினர்.

தாஜ்மஹால் திங்கள்கிழமை காலை 11:30 மணி முதல் பார்வையாளர்களுக்கு பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மூடப்படும்" என்று தொல்பொருள் ஆராய்ச்சிக் குழுமத்தின்(ASI) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் நிலையை மேம்படுத்துவதற்காக கடந்த சில நாட்களாக யமுனாவில் தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது, மேலும் அதன் கரைகளில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்டுகின்றன.

கல்லறைக்கு அருகிலுள்ள பகுதியான தாஜ் கஞ்சில், நகரத்தை அழகுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக டிரம்ப்பின் வாகனத் தொடர் பயணிக்க வேண்டிய பாதையில் பல கடைகள் சீரான அடையாள அட்டைகளை காட்சிப் படுத்தியுள்ளன.

வழிகாட்டி(guide) அப்துல் கானும் டிரம்ப்பின் வருகையைப் பற்றி கூறுகையில், இது "ஆக்ராவின் அந்தஸ்தை அதிகரிக்கும் மற்றும் சுற்றுலாவை மேலும் அதிகரிக்கும்" என்று கூறினார்.

ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர் சத்யேந்தர் சுக்லா, "நகரம் சுத்தம் செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டிருப்பது நல்லது, ஆனால் நிர்வாகமும் மக்களும் இதனை வி.வி.ஐ.பி வருகைக்கு மட்டுமல்லாது, நிலையாகக் காப்பாற்றி வைத்திருக்க வேண்டும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.