ETV Bharat / state

சென்னையின் முக்கிய சாலைக்கு 'எஸ்.பி.பி சாலை' பெயர் மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு - SPB ROAD - SPB ROAD

எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவு தினமான இன்று(செப்.25) அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் பிரதான சாலைக்கு 'எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை' என பெயரிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தலைமைச் செயலகம், எஸ்.பி.பி
தலைமைச் செயலகம், எஸ்.பி.பி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2024, 7:29 PM IST

சென்னை : சென்னை காம்தார் நகருக்கு 'எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்' என்று பெயர் சூட்ட வேண்டும் என கடந்த 23ம் தேதி எஸ்.பி.பி.சரண் முதலமைச்சர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.

இந்நிலையில், திரை இசைப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவு தினமான இன்று(செப்.25) அவரது நினைவைப் போற்றும் வகையில், அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம், காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு "எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை" எனப் பெயர் சூட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: காற்றில் கலந்த காந்தக் குரல், பாடும் வானம்பாடி எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவு நாள் ஸ்பெஷல்!

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, தன்னுடைய அமுதக் குரலால் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை மழை பொழிந்ததோடு, பல படங்களுக்கு இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்தும், பல்துறை வித்தகராக விளங்கியவரும், மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருதுகள் பெற்றவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் அன்பிற்குரியவருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 25-9-2020ம் ஆண்டு, இதே நாளன்று நம்மை விட்டுப் பிரிந்தார். காலம் அவரைப் பிரித்தாலும், நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் அவர்.

அன்னார் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும், அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு 'எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை' எனப் பெயரிடப்படும்" என தமிழக அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.