ETV Bharat / bharat

தி வோல் நேசன் வான்ட்ஸ் டூ நோ - ரிபப்ளிக் டிவி செய்த டி.ஆர்.பி முறைகேடு!

மும்பை : ரிபப்ளிக் டி.வி உள்ளிட்ட மூன்று சேனல்கள் தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளிகளை (டி.ஆர்.பி) முறைகேடான வழியில் உயர்த்தியதாக ஒலிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் கண்டறிந்துள்ளது.

author img

By

Published : Oct 11, 2020, 1:26 AM IST

தி வோல் நேசன் வான்ட்ஸ் டூ நோ - ரிபப்ளிக் டிவி செய்த டி.ஆர்.பி முறைகேடு!
தி வோல் நேசன் வான்ட்ஸ் டூ நோ - ரிபப்ளிக் டிவி செய்த டி.ஆர்.பி முறைகேடு!

தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெற்றுள்ள செல்வாக்கை அளவிட தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளிகளை (Television Rating Points) கணக்கிடப்படுகிறது.

பார்வையாளார்கள் எண்ணிக்கை அதிகமானால் அந்தப் புள்ளிகள் அதிகமாகும். புள்ளிகள் அதிகமானால் விளம்பரங்கள் அதிகமாக ஈர்க்கப்படும். இதன் மூலம் ஊடகத்தின் அதிக வருவாய் உயரும்.

எனவேதான் இவ்வரிசையில் அதிகமான புள்ளிகளை பெற்று முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற போட்டியில் ஒவ்வொரு தனியார் சேனல்களும் ஓடிக்கொண்டிருக்கின்றன.

இதில் பல்வேறு வகையில் முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து, அதனை கண்காணிக்கும் பணியில் ஒலிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சிலுக்கு (பி.ஏ.ஆர்.சி) இறங்கியது.

அப்போது, மும்பையில் பிரபல ரிபப்ளிக் டிவி, ஃபக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா ஆகிய மூன்று சேனல்கள் டி.ஆர்.பி. தரவரிசையை உயர்த்திக் காட்டிட முறைகேடான வழிகளைக் கைக்கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக மும்பை பெருநகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இந்த மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளிக்க ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை நிதி அலுவலர் (சி.எஃப்.ஓ) சிவ சுப்ரமணியம் சுந்தரம், மாடிசன் வேர்ல்ட் மற்றும் மேடிசன் கம்யூனிகேஷன்ஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சாம் பல்சரா ஆகியோருக்கு மும்பை காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

அதேபோல, ஃபக்த் மராத்தி மற்றும் பாக்ஸ் சினிமா ஆகிய இரண்டு விளம்பர நிறுவனங்களின் கணக்காளர்களையும் காவல்துறையினர் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

இந்த மோசடி தொடர்பாக ஹன்சா ரிசர்ச் குரூப் பிரைவேட் லிமிடெட் அளித்த புகாரின் பேரில் ஃபக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா ஆகியவற்றின் உரிமையாளர்கள் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்திருப்பது கவனிக்கத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.