தொலைக்காட்சி பார்வையாளர்களின் அளவை கணக்கிடும் டிஆர்பி(TRP) என்ற குறியீட்டை வைத்துதான் அந்த சேனலின் பிரபலத்தன்மை கண்டறியப்படுகிறது. இந்த டிஆர்பி விவரங்களை வெளியிடும் பார்க்(BARC) அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அலுவலர் பர்தோ தாஸ்குப்தா முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு மும்பை காவல்துறையால் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
சிறையிலிருந்த தாஸ்குப்தா கடந்த வாரம் திடீரென மயங்கிவிழுந்த நிலையில், அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஒருவார சிகிக்சைக்குப் பின் உடல் நலம் தேறிய தாஸ்குப்தா, தற்போது டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். உடல்நிலை கோளாறு காரணமாக அவரது பிணை மனுவை மும்பை உயர் நீதிமன்றம் நாளை மறுநாள் (ஜனவரி 25) விசாரிக்கவுள்ளது. குறைந்தபட்சம் இரண்டு வாரம் பிணை வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நடப்பாண்டில் 23.41% அதிகரித்த நெல் கொள்முதல்