பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை தனி விமானம் மூலம் கோவை வருகிறார். முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாமக தலைவர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் அவர் கோவையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் 'கோ பேக் மோடி' என்று மோடியே திரும்ப போ என ட்விட்டரில் டிரெண்ட் ஆவது வழக்கமாக உள்ளது. மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் டிரெண்ட் செய்வதைத் தமிழகத்தில் பலர் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். இதற்குப் போட்டியாக பாஜகவும் பிஎம் மோடி ’வெல்கம் டு தமிழ்நாடு’ என டிரெண்ட் செய்வதும் வழக்கம்.
இந்நிலையில், இன்று வழக்கம் போல் பிரதமர் நரேந்திர மோடி கோவை வருவதை எதிர்த்து ட்விட்டரில் கோ பேக் மோடி டிரெண்டிங் ஆகி வருகிறது. எனினும் இதையெல்லாம் மோடி ஒருபோதும் கண்டுகொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.