குஜராத் மாநிலம் கோத்ரா பகுதியில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை கருத்தில் கொண்டு அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ரேஷன் பொருள்கள், உணவு, பணம் போன்ற அத்தியாவசியப் பொருட்களை திருநங்கைகள் விநியோகம் செய்து வருகின்றனர்.
நாட்டில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 24ஆம் அன்று பிரதமர் நரேந்திர மோடியால் 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இதுவரை மத்திய சுகாதார குடும்ப நல அமைச்சக அறிவிப்பின் படி நாட்டில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது வரை 1,071 ஆக உள்ளது.
இதையும் படிங்க: 'உணவு கொடுத்து உதவுங்கள்' - பரிதவிக்கும் திருநங்கைகள்