ETV Bharat / bharat

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் : பஞ்சாப்பில் விரைவில் ரயில் சேவை! - ரயில் மறியல்

சண்டிகர் : வேளாண் சட்டங்களுக்கு எதிராக ரயில் மறியலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், ரயில்களை இயக்க அனுமதியளித்ததைத் தொடர்ந்து, விரைவில் பஞ்சாப்பில் ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Train services in Punjab
Train services in Punjab
author img

By

Published : Nov 7, 2020, 9:33 PM IST

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதில் விவசாயம் தொடர்பான மூன்று முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக உள்ளதாக குற்றஞ்சாட்டி, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, இந்த மூன்று வேளாண் சட்டடங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநில விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் போராட்டம் காரணமாக விவசாயத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களைகூட எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ரயில் நிலையங்களில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளனர். இது குறித்து பஞ்சாப் அரசு தனது ட்விட்டரில், "நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தின் 21 ரயில் நிலையங்களில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள், சரக்கு ரயில்களை இயக்க அனுமதித்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், "பயணிகள், ரயில்வே ஊழியர்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் பாதுகாப்பிற்காக அனைத்து ரயில் தடங்கள், நிலையங்கள் மற்றும் ரயில்வே சொத்துக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பஞ்சாப் மக்கள் சாத் பூஜை, தீபாவளி மற்றும் குருபுராப் போன்ற பண்டிகைகளுக்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க விரும்புகிறார்கள்.

  • Urge Punjab Govt to ensure full safety and security of entire Railways system and allow running of all trains through and to Punjab so that goods and passenger trains can serve the people of Punjab.

    — Piyush Goyal (@PiyushGoyal) November 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முழு ரயில்வே அமைப்பின் பாதுகாப்பையும் பஞ்சாப் அரசு உறுதி செய்ய வேண்டும், மேலும் அனைத்து ரயில்களையும் இயக்க அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் பஞ்சாப் மக்களுக்கு சேவை அளிக்க முடியும்" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அர்னாபை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் மனு மீது நவ. 9இல் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.