டெல்லியிலும், அதனைச் சுற்றியுள்ள நொய்டா, குருகிராம், ஃபரிதாபாத், காசியாபாத் ஆகிய பகுதிகளிலும் இன்று காலை கனமழை பெய்தது. மழைநீர் தேங்கியதன் காரணமாக பல முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து டெல்லி போக்குவரத்து காவல் துறையினர் போக்குவரத்து இடையூறு ஏற்படாதவண்ணம் மாற்றுப் பாதைகளில் செல்ல வாகன ஓட்டிகளை அறிவுறுத்தினர்.
தலைநகரில் வரும் 23ஆம் தேதி வரை மழை அதிகம் பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும், செல்சியஸ் 25 டிகிரி முதல் 35 டிகிரி வரை இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.