சென்ற மாதம் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவின் காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியையும் நாட்டின் பிறபகுதிகளையும் இணைக்கும் முக்கிய சாலையான முகல் சாலை மூடப்பட்டது. அச்சாலையில் ஒரு வழியிலுள்ள பனி நீக்கப்பட்டு, தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சாலை பராமரிப்பு பணிகளில் ஈடுபட்ட பொறியாளர் பையத் அஹ்மத் கூறுகையில், "கடும் பணிப்பொழிவின் காரணமாக நவம்பர் 5 மற்றும் 7ஆம் தேதிகளில் இந்த முகில் சாலை முற்றிலுமாக மூடப்பட்டது. அதன் பின், சாலையிலிருந்த பணியை நீக்கும் வேலையை கடந்த ஒரு மாதமாக செய்தோம். சாலையில் ஒரு பக்கம் இருந்த பனி தற்போது முற்றிலுமாக நீக்கப்பட்டு, சாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது" என்றார்.
அப்பகுதியின் துணை ஆணையர் ஷோபேன் சவுத்ரி முகமது யாசின், சாலையின் தன்மையை பரிசோதித்து, சாலையின் ஒரு பக்கம் மட்டும் வாகனங்களை இயக்க அனுமதியளித்தார்.
இதையும் படிங்க: வெங்காயம் விலை அதிகரிப்பு: பாஜக மகளிரணிக்கு சிவசேனா கேள்வி!