தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்திலுள்ள இந்திரா பவனில் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று (செப்டம்பர் 12) நடைபெற்றது. இதில் மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்ட மற்றும் நகர தலைவர்கள் கலந்துகொண்டனர். தெலங்கானா காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உத்தம்குமார் ரெட்டி இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்தார்.
அப்போது, ஃபெரோஸ் கான், முகமது கவுஸ் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் காங்கிரஸின் இரு கோஷ்டிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கோவிட்-19 நெறிமுறைகளை முறையாக பின்பற்றாமல் இரு பிரிவினரும் மோதிக்கொண்டே வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. தள்ளமுள்ளு நீண்ட நேரம் தொடர்ந்ததால், உத்தம்குமார் ரெட்டி தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார்.
இதையும் படிங்க: திட்டமிட்டுப் போராடி இந்தியாவை படுகுழியில் தள்ளிய மோடி அரசு - ராகுல் தாக்கு