உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19), தற்போது இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இருப்பினும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை தற்போது 107 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றால், இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக, ஸ்ரீ கர்த்தார்பூர் சாஹிப் செல்ல மார்ச் 12 முதல் தற்காலிகமாகத் தடை விதித்து மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை வங்கதேசம் உள்ளிட்ட எல்லை நாடுகளுடனான பேருந்து, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று பல்வேறு மாநில அரசுகளும், வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக, பள்ளிகள், கல்லூரிகள், முக்கியச் சுற்றுலாத்தலங்களுக்குச் செல்லவும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் கொரோனோ பரிசோதனை செய்ய மறுப்பு: முதலமைச்சருக்குப் பறந்த மின்னஞ்சல்