ETV Bharat / bharat

இந்தியாவில் 8.5 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு! - இந்தியாவில் 8.5 லட்சத்தை கடந்த கரோனா

டெல்லி: இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29 ஆயிரத்து 442 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 50 ஆயிரத்து 358ஆக உயர்ந்துள்ளது.

corona cases in India
corona cases in India
author img

By

Published : Jul 12, 2020, 12:23 PM IST

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, ”இன்று (ஜூலை 12) காலை நிலவரப்படி, 29 ஆயிரத்து 442 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 50 ஆயிரத்து 358ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கரோனாவால் 22 ஆயிரத்து 687 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி 551 பேர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 36 ஆயிரத்து 231ஆக உள்ளது. அதன்படி 63 விழுக்காட்டினர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

மேலும் மொத்தம் 1 கோடியே 15 லட்சத்து 87 ஆயிரத்து 153 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: குணமடைந்தவர்களின் சதவீதம் 74 ஆக உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.