வங்கக் கடலில் உருவான புயல், ஆந்திராவின் வடக்கு கடலோரப் பகுதியான காக்கிநாடாவில் அக்டோபர் 13ஆம் தேதி கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்த நேரத்தில் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பலத்த மழை பெய்தது. பலத்த மழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.
மழையால் பல இடங்களில் வீடுகள் சேதமடைந்தன. மழைக்கு இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், அம்மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
தலைநகர் ஹைதராபாத்தில் மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, மழை பாதிப்புக்குள்ளான பெரும்பாலான இடங்கள் இயல்புநிலைக்குத் திரும்பிவருகின்றன.
மீட்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள 1,350 கோடி ரூபாய் நிதி உதவியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் கோரிக்கை விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு தலா ஐந்து லட்சம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் பெரும்பாலான நீர் நிலைகள் முழு கொள்ளளவை எட்டியதையொட்டி, அதிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மாநிலத்திலுள்ள பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தொடங்கியது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்!