ஜார்கண்ட் மாநிலத்தில் அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்த மொகமது கலிமுதின் என்ற பயங்கரவாதியை சில ஆண்டுகளாக அம்மாநிலத்தின் காவல் படையினர் தேடிவந்த நிலையில், ஜம்ஷெத்பூர் மாவட்டத்தில் உள்ள டாடா ரயில்வே நிலையம் அருகே, சிறப்பு பயங்கரவாத எதிர்ப்புப் காவல் படையினர் அவரை கைது செய்துள்ளனர்.
இது குறித்து அம்மாநில கூடுதல் காவலர்களின் தலைமை இயக்குநர் மீனா கூறுகையில், "கலிமுதினை மூன்று ஆண்டுகளாக பல குற்றவழக்குகளில் தேடிவந்தோம், இந்தியாவிலிருந்து அவர்தான் அல்கொய்தாஅமைப்புக்கு ஆட்களை சேர்க்கும் முக்கிய நபர்களில் ஒருவராக இருந்துவந்துள்ளார். குறிப்பாக உத்தரப் பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களை தேர்வு செய்து பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளார். மேலும் வங்கதேசம், தென் ஆப்ரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் இளைஞர்களையும் அந்த அமைப்பில் சேர்க்க இவர்கள் நோட்டமிட்டு வந்தனர்.
இவரின் மற்ற கூட்டாளிகளான, மொகமது அப்துல் ரஹ்மான், அலி ஹைதர், உஜ்ஜர் ஆகியோரையும் கைது செய்து டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைத்துள்ளோம்" என்றார்.