ETV Bharat / bharat

அறிவியல் & தொழில்நுட்பம் 2020 - 50 முக்கிய நிகழ்வுகள்! - ஜூம் செயலி

2020ஆம் ஆண்டில் அறிவியல் & தொழில்நுட்பத்தில் புதுமையான பல விஷயங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் முக்கியமான 50 நிகழ்வுகளை இங்கே காண்போம்.

Top 50 science and technology
Top 50 science and technology
author img

By

Published : Dec 27, 2020, 6:35 PM IST

Updated : Jan 1, 2021, 8:16 AM IST

  • (1) டிக்டாக் செயலிக்கு தடை

சீனச் செயலிகளால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகக் கூறி, அந்நாட்டுச் செயலிகளுக்கு தடைவிதிக்க மத்திய அரசுக்கு உளவுத்துறை பரிந்துரைத்திருந்தது. அதன்படி, டிக்டாக், யூசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீனச் செயலிகளுக்கு தடைவிதித்து இந்திய அரசு உத்தரவிட்டது. 130 கோடி இந்தியர்களின் தனியுரிமையை பாதிக்கும் வகையில் செயல்படுவதால் இந்தச் செயலிகள் தடை செய்யப்படுவதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

  • (2) பப்ஜி விளையாட்டுக்குத் தடை

சிறுவர்கள், இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த பப்ஜி கேம், கட் கட், பைடு, ரைஸ் ஆப் கிங்டம்ஸ், கேரம் ஃப்ரண்ட்ஸ் உள்ளிட்ட மேலும் 118 சீனச் செயலிகளுக்கு மத்திய அரசு செப்டம்பர் மாதம் தடைவிதித்து உத்தரவிட்டது.

பப்ஜி கேம்
பப்ஜி கேம்
  • (3) 1 மில்லியனை தொட்ட FAU-G கேம்

FAU-G கேம் nCore கேம்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட உள்நாட்டு ஆத்மநிர்பார் ஷூட்டிங் கேம் ஆகும். இந்த கேம் ஃபிளே ஸ்டோரில் பதிவு செய்யப்பட்ட மூன்றே நாள்களில் ஒரு மில்லியன் முன்பதிவுகளைத் தாண்டியது. PUBG விளையாடியவர்களுக்கு உள்ளூர் மாற்றாக கருதப்படுகிறது.

அறிவியல் & தொழில்நுட்பம் 2020 - 50 முக்கிய நிகழ்வுகள்!
  • (4) வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதி அறிமுகம்

வாட்ஸ்அப் செயலியில் UPI மூலம் பணம் அனுப்பும் வசதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் வாட்ஸ்அப்பில் அனுப்பும் மெசேஜ்கள் குறிப்பிட்ட நாளில் மறைந்துபோகும் (disappear message) வசதியையும் அந்நிறுவனம் கொண்டு வந்தது பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

வாட்ஸ்அப் செயலி
வாட்ஸ்அப் செயலி
  • (5) சுழல் திரை கொண்ட ஸ்மார்ட்போன்

எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய விங், வெல்வெட் ஆகிய இரு ஸ்மார்ட் ஸ்மார்ட்போன்களும், இரண்டு திரைகள் கொண்டுள்ளன. இதில், சுழல் திரை அமைப்புடன் டிஸ்பிளே உள்ளது. எல்ஜி வெல்வெட் விலை இந்தியாவில் ரூ.36,990ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல், எல்ஜி வெல்வெட் டூயல் ஸ்கிரீன் காம்போவின் விலை ரூ.49,990 ஆகும். எல்ஜி வெல்வெட் ஒரு தனித்துவமான 3D ஆர்க் வடிவமைப்பு மற்றும் சற்று வளைந்த விளிம்புகளைக் கொண்டுள்ளது.

  • (6) உலகின் மிகச் சிறிய 8 டிபி பென் டிரைவ் அறிமுகம்

உலகின் மிகச் சிறிய, அதிக திறன் கொண்ட 8 டிபி பென் டிரைவை சான்டிஸ்க் நிறுவனம் செஸ் 2020 நிகழ்வில் காட்சிப்படுத்தி இருந்தது. இது விநாடிக்கு 20 ஜிகாபைட் வரை பரிமாற்ற வேகத்தை வழங்க வல்லது.

  • (7) முதல் ரெட்மி ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

சியோமி நிறுவனத்தின் முதல் ரெட்மி ஸ்மார்ட்வாட்ச் கலக்கல் அம்சங்களுடன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சதுர வடிவில் இது உருவாக்கப்பட்டுள்ளது. பேட்டரி சேவிங் பயன்முறையின்கீழ் 12 நாட்கள் வரை பயன்பாட்டை வழங்குவதாக கூறப்படுகிறது. இதில், ஏழு ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. ரெட்மி வாட்ச் சீனாவில் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.3,300க்கு அறிமானது. 50 மீட்டர் ஆழ நீரில் கூட வேலை செய்யும் வாட்டர் ப்ரூஃப் வசதி கொண்டது.

சியோமி ஸ்மார்ட் வாட்ச்
சியோமி ஸ்மார்ட் வாட்ச்
  • (8) சுழலும் டிவி அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் தனித்துவமான சுழலும் டிவியான சாம்சங் செரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒரு தனித்துவமான 4K QLED டிவி. இது கிடைமட்டத்திலிருந்து செங்குத்து நோக்குநிலைகளுக்கு மாறக்கூடிய திறன் கொண்டது. இந்த சாம்சங் செரோ 43 இன்ச் ஸ்க்ரீன் டிவி இந்தியாவில் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 990 என்கிற விலையில் கிடைக்கிறது.

சாம்சங் சுழலும் டிவி
சாம்சங் சுழலும் டிவி
  • (9) ஓடிடி-க்கு அமோக வரவேற்பு

2020-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை, Netflix-இல் புதிதாக ஒரு கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இணைந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, நெட்பிளிக்ஸ் தளத்துக்கு உலகம் முழுவதும் 18 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர். இதே போலவே, மற்ற ஓடிடி தளத்தின் சந்தாதாரர்கள் எண்ணிக்கையும் இந்த ஆண்டு கணிசமாக உயர்ந்தது.

  • (10) ஜியோ கிளாஸ் அறிமுகம்

மெய் நிகர் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கூலிங் கிளாஸ்-ஐ ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 75 கிராம் எடையிலான இந்த கண்ணாடி வழியே, மற்றவர்களிடம் உரையாடலாம். 3D விர்ச்சுவல் கிளாஸ் ரூம் மூலம் ஹோலோகிராபிக் வழியே பாடங்களை எடுக்கலாம். மேலும், விர்ட்சுவல் டூர் மூலம் பல இடங்களை சுற்றிப்பார்க்க இயலும் என்பதால் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

  • (11) உலகின் மிகச்சிறிய நானோ-குளிர்சாதன பெட்டி

யு.சி.எல்.ஏ (கலிபோர்னியா பல்கலைக்கழகம்) என்ற ஆராய்ச்சியாளர்கள் குழு 100 நானோமீட்டர் தடிமன் கொண்ட தெர்மோ எலக்ட்ரிக் குளிரூட்டிகளை வெற்றிகரமாக உருவாக்கினர். இந்த புதுமையான நுட்பம் குளிரூட்டும் செயல்திறனை அளவிடுவதற்கான ஒரு வழியாகும். ஒரு நானோ மீட்டரின் அளவு ஒரு மில்லிமீட்டரில் ஒரு மில்லியனுக்கு சமமாகும். இவை கணினிகளை குளிர்விப்பதற்கான முன்மாதிரியாகவும் (prototype) மற்றும் பெரிய அளவிலான ஃபைபர்-ஆப்டிக் நெட்வொர்க்குகளின் வெப்பநிலையை சீராக்கவும் பயன்படுத்தப்படும்.

மிகச்சிறிய நானோ-குளிர்சாதன பெட்டி
மிகச்சிறிய நானோ-குளிர்சாதன பெட்டி
  • (12) கற்பனை முகத்தை காட்டும் கண்ணாடி

தென்கொரியாவில் அழகு சாதனப் பொருட்கள் விற்கும் கடைகளின் உபயோகத்திற்கான புனை மெய்மை என்று சொல்லப்படும் ஆக்மெண்டேட் ரியாலிட்டி (Augmented reality) கண்ணாடி அறிமுகமானது. அழகு சாதனப் பொருட்கள் வாங்கச் செல்லும் பெண்கள் பிடித்தவற்றை பயன்படுத்தி பார்ப்பது வழக்கம். இதை கருத்தில் கொண்டு இந்த கண்ணாடி உருவாக்கப்பட்டுள்ளது.

கற்பனை முகத்தை காட்டும் கண்ணாடி
கற்பனை முகத்தை காட்டும் கண்ணாடி
  • (13) கிருமியை தானாக அழிக்கும் மாஸ்க்

தன்னைத்தானே கிருமி நீக்கம் செய்துகொள்ளும் முகக்கவசங்களை இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்தனர். செல்போனை சார்ஜ் செய்வது போல 30 நிமிடங்களுக்கு இந்த முகக்கவசத்தை சார்ஜ் செய்தால் உள்ளே இருக்கும் கார்பன் இழைகளுக்குள் 158 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் உருவாக்கப்பட்டு வைரஸ்கள் கொல்லப்படுகின்றன.

  • (14) Mi பல் துலக்கும் எலெக்ட்ரிக் ப்ரஷ்

சியோமி நிறுவனம் பல் துலக்க உதவும் எலெக்ட்ரிக் ப்ரஷை (electric brush) இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் விலை 1,299 ரூபாய். mi.com என்ற இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. சோனிக் மோட்டர் இணைக்கப்பட்டுள்ள இந்த பல் துலக்கும் ப்ரஷ், நிமிடத்துக்கு 31 ஆயிரம் முறை அதிர்வுகளை ஏற்படுத்தி பற்களை சுத்தம் செய்யும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 25 நாட்கள் வரையில் பயன்படுத்த முடியும்.

Mi எலெக்ட்ரிக் டூத் ப்ரஷ்
Mi எலெக்ட்ரிக் டூத் ப்ரஷ்
  • (15) ஆன்லைன் ரம்மிக்கு தடை

ஆன்லைன் ரம்மி எனப்படும் சூதாட்ட விளையாட்டில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் இந்த ஆண்டு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆன்லைன் ரம்மி போன்ற பணம் வைத்து விளையாடும் இணையவழி விளையாட்டுளை அரசு தடை செய்தது. இனிவரும் காலங்களில் அவற்றை விளையாடுவோரும், நடத்துவோரும் அபராதத்திற்கும், சிறைத் தண்டனைக்கும் உள்ளாக்கப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்தது.

  • (16) விங்சூட்டை அறிமுகம் செய்த பி.எம்.டபிள்யூ

சாதாரண விங் சூட்டை விட மூன்று மடங்கு அதிகமாக, மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக் கூடிய பேட்மேன் வகை விங்சூட்டை BMW அறிமுகம் செய்துள்ளது. இதற்காக ஸ்கை டைவர் பீட்டர் சால்ஸ்மேனுடன் இணைந்து மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளது. சுமார் 300 கி.மீ வேகத்தில் ஆஸ்திரியா மலைகளுக்கிடையே சக வீரர்களுடன் பீட்டர் சால்ஸ்மேன் பறந்து சாகசம் செய்தார்.

விங் சூட்
விங் சூட்டில் பறக்கும் பீட்டர் சால்ஸ்மேன்
  • (17) ஹைபர்லூப்: முதன்முறையாக பயணிகளுடன் சோதனை ஓட்டம்!

பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தக் கூடிய ஹைபர்லூப், முதன்முறையாக பயணிகளுடன் வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சுமார் மணிக்கு 172 கிலோ மீட்டர் வேகத்தில் வெற்றிகரமாக இயக்கப்பட்டது. ஹைப்பர்லூப் என்பது ஒரு புதிய போக்குவரத்து பயன்முறையாகும். இது ஒரு நேரத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் பொருள்களை அதிவேகத்தில் குழாய்கள் அல்லது சுரங்கங்கள் வழியாக கொண்டுசெல்கிறது. இதில் பயணிக்கும்போது நியூயார்க், வாஷிங்டன் இடையிலான பயணம் அரை மணி நேரமாக குறையும்.

ஹைபர்லூப்
ஹைபர்லூப்
  • (18) சுருட்டி வைக்கும் டிவி

எல்ஜி நிறுவனம், சுருட்டி வைக்கும் வசதியுடன் கூடிய ஓஎல்இடி திரையைக் கொண்ட டிவியை முதன்முறையாக தென்கொரியாவில் அறிமுகம் செய்தது. 65 இன்ச் கொண்ட ஆர்எக்ஸ் மாடல் டிவி, சிறிய பெட்டி ஒன்றை அடித்தளத்தில் கொண்டுள்ளது. சூழலுக்கு ஏற்ப ஒளி, பிக்சல் உள்ளிட்ட அளவுகளை தானாக மாற்றக்கூடிய ஓஎல்இடி திரையை, ரிமோட் கண்ட்ரோல் உதவியுடன் அந்த பெட்டிக்குள் சுருட்டி வைக்கும் வகையிலும் வெளியே எடுக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுருட்டி வைக்கும் டிவி
சுருட்டி வைக்கும் டிவி
  • (19) ஒன்பிளஸ் நார்ட் அறிமுகம்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் கண்டுபிடிப்பான ஒன்பிளஸ் நார்ட் ஸ்மார்ட் போன், இந்தியாவில் 24,999 ரூபாய் என்ற ஆரம்ப விலையுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செல்போன் ஸ்மார்ட்போன் செக்மண்டில் அனைத்தையும் பூர்த்தி செய்தது. பின்பக்கம் 4 கேமராக்களும் முன்பக்கம் 2 கேமராக்களும் என மொத்தமாக 6 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. Gray Onyx மற்றும் Blue Marble என இரு வண்ணங்களில் கிடைக்கிறது.

  • (20) வீட்டை கண்காணிக்கும் பறக்கும் கேமரா

ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீடுகளை பறந்து கண்காணிக்கும் புதிய செக்யூரிட்டி கேமராவை, ரிங் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இண்டோர் கண்காணிப்பிற்கு பல கேமராக்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, ஒரே கேமராவில் அனைத்தையும் செய்ய முடியும். இந்த கேமரா அடுத்த ஆண்டு சந்தைக்கு வருகிறது.

வீட்டை கண்காணிக்கும் பறக்கும் கேமரா
வீட்டை கண்காணிக்கும் பறக்கும் கேமரா
  • (21) உலகின் முதல் மாஸ்க் கண்காட்சி

உலகின் முதல் மாஸ்க் கண்காட்சி, செக் நாட்டில் நேஷனல் மியூசியத்தில் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட முகக்கவசங்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. மக்கள் மத்தியில் கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த கண்காட்சி அரங்கேறியது. இதில், ஒரு ஆட்டிச குழந்தை தயாரித்த மாஸ்க்கும் இடம் பெற்றிருந்தது.

  • (22) ஆப்பிள் ஏர்பாட்ஸ் மேக்ஸ் அறிமுகம்

ஆப்பிளின் முதல் 'Over-ear ஹெட்போன்ஸான 'ஏர்பாட்ஸ் மேக்ஸ்' (AirPods Max) டிசம்பர் 15ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. இதன் விலை 59 ஆயிரத்து 900 ரூபாய். புதிய ஆப்பிள் ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஒவர் இயர் ஹெட்போன் ஸ்பேஸ் கிரே, சில்வர், கிரீன், ஸ்கை புளூ மற்றும் பின்க் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதில் அடாப்டிவ் இகியூ ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், டிரான்ஸ்பேரன்சி மோட் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் ஆடியோ கேட்கும்போது வெவ்வேறு வசதிகளை வழங்குகிறது.

  • (23) ஷாவ்மியின் டிரான்ஸ்பரன்ட் டிவி!

ஷாவ்மி நிறுவனம் Mi Tv Lux OLED என்ற டிவியை அறிமுகப்படுத்தியது. இந்த டிவியின் டிஸ்ப்ளே முழுவதும் டிரான்ஸ்பரன்டாக இருக்கும். அதாவது, டிவி ஓடாத நேரங்களில் கூட அதன் பின்னால் இருப்பது அப்படியே காட்டும். இதன் விலை சுமார் 5.25 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • (24) நவீன அவதாரத்தில் சோனி வாக்மேன்

NW-A100, 105 எனும் ஆண்ட்ராய்டு வாக்மேனை சோனி நிறுவனம் அறிமுகம் செய்தது. வைஃபை வசதியுடன் இருப்பதால், ஸ்பாட்டிபை, அமேசான், கானா உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கும் ஆடியோ சேவைகளையும் பெறலாம். மேலும், புளுடூத், என்.எப்.சி., இணைப்பு வசதிகளும் இருக்கின்றன. இந்த வாக்மேன், 16 ஜி.பி., உள்சேமிப்பு திறன் கொண்டது. ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், தாராளமாக ஒரு நாள் முழுக்க பாடல்களை கேட்கலாம். இதன் விலை ரூ.23,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

  • (25) குளிர்காலத்தில் போனுடன் கைகளையும் சேர்த்து சூடேற்றும் புதிய பவர் பேங்க்!

சியோமி ZMI ஹேண்ட் வார்மர் / பவர் பேங்க் சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை 1000 ரூபாய். 5,000 mAh திறன் கொண்ட இந்த சாதனம் கைகளுக்கு வெப்பமூட்டும் சாதனமாகவும் மற்றும் ஒரு பவர் பேங்க் ஆகவும் செயல்படுகிறது. டார்ச்லைட்டாகப் பயன்படுத்த LED லைட்டும் உள்ளது. கை வெப்பமூட்டுவதையும் மற்றும் பவர் பேங்க் செயல்பாடுகளையும் ஒன்றாகப் பயன்படுத்த முடியுமா என்று யோசிப்பவர்களுக்கு, சியோமி இரண்டில் ஒன்றை மட்டுமே ஒரு நேரத்தில் பாதுகாப்பை மேம்படுத்த பயன்படுத்த முடியும் என்று அறிவித்துள்ளது.

பவர் பேங்க்
பவர் பேங்க்
  • (26) செயற்கை சூரியனை உருவாக்கிய சீனா

செயற்கை சூரியன் என அழைக்கப்பட்ட அணுக்கரு இணைவு உலையை வெற்றிகரமாக சீனா சுவிட் ஆன் செய்துள்ளது. இதிலிருந்து வெளிப்படும் வெப்பம் சூரியனை விடவும் 10 மடங்கு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. சீனாவைப் போல், பிரான்ஸ் நாடும் உலகின் மிகப்பெரிய அணுக்கரு பிணைப்பு உலையை உருவாக்கி வருகிறது.

  • (27) GPS-க்கு மாற்றாக NavIC அறிமுகம்

இந்தியாவில் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் அமெரிக்க அரசுக்கு சொந்தமான ஜிபிஎஸ்-க்கு (GPS) பதிலாக, இந்தியா, சொந்தமாக இருப்பிடத்தை கண்டறியும் NavIC வழிகாட்டு முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கோள் வரிசையில் ஏ முதல் ஐ வரை விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கை கோள்கள் மூலமாக 1500 கி.மீ. சுற்றளவில் கடல் வழிகளையும், எல்லைகளையும் துல்லியமாக கணிக்க முடியும்.

  • (28) கடல் அலையில் சிக்கியவர்களை மீட்கும் மிதவை இயந்திரம்

கடல் அலையில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்பதற்காக “U SAFE” என்கிற மிதவை இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீச்சல் வீரர்கள் பயன்படுத்தும் ஜாக்கெட் போன்ற அமைப்பு கொண்ட இந்த இயந்திரத்தை கடலில் எறிந்த பிறகு, ரிமோட் கண்ட்ரோல் மூலம் இதனை இயக்கலாம். ராட்சச அலைகளையும் எளிதாக கடந்து செல்லும் திறன் கொண்டது.

  • (29) ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.90 கோடி அபராதம்!

water resistant என விளம்பரம் செய்த ஆப்பிள் ஐபோன் நிறுவனத்துக்கு இத்தாலியில் ரூ.90 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சூழலில் மட்டுமே water resistant செயல்படும் என்பதால், வாடிக்கையாளர்களை ஏமாற்றும் செயல் என இத்தாலியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

  • (30) வீடுகளை சுத்தம் செய்யும் ரோபோ க்ளீனர்

கலிபோர்னியாவைச் சேர்ந்த ட்ரிஃபோ இந்தியாவில் இரண்டு வெற்றிட க்ளீனர் ரோபோக்களை அறிமுகப்படுத்தியது. எம்மா ஸ்டாண்டர்ட் மற்றும் எம்மா பெட் ஆகிய இரண்டு மாடல்களும் வைஃபை இணைப்பு மற்றும் அமேசான் அலெக்சாவுடனான குரல் கட்டளைகளுடன் இயக்கலாம். எம்மா ஸ்டாண்டர்டு விலை ரூ.21,990 மற்றும் எம்மா பெட் விலை ரூ.23,990 என நிர்ணயம் செய்துள்ளனர்.

வீட்டை சுத்தப்படுத்தும் ரோபோ க்ளீனர்
வீட்டை சுத்தப்படுத்தும் ரோபோ க்ளீனர்
  • (31) பாட்டுக் கேட்கலாம், போன் பேசலாம் - ஸ்மார்ட் மாஸ்க் அறிமுகம்!

மாஸ்க் உடன் இணைக்கப்பட்ட மைக்ரோஃபோன் சாதனம் பாடல் கேட்கும் வசதி, குரல் அழைப்புகளை அட்டென்ட் செய்து பேசும் வசதியோடு அறிமுகப்படுத்தப்பட்டது. இதை துவைத்தும் பயன்படுத்தலாம். பாடலை கேட்கும்போது அதை நிறுத்தவும், ஒலியை கட்டுப்படுத்தும் அம்சத்தோடு இந்த மாஸ்க் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாஸ்க்கில் அலெக்ஸா அணுகல், கூகுள் அசிஸ்டென்ட் போன்ற குரல் ரெக்கக்னைஸ் அம்சமும் உள்ளது. இந்த மாஸ்க்-இன் இந்திய மதிப்பின் விலை ரூ.3,600.

ஸ்மார்ட் மாஸ்க்
ஸ்மார்ட் மாஸ்க்
  • (32) அமேசானின் ஸ்மார்ட் பிளக் இந்தியாவில் அறிமுகம்

அமேசான் தனது ஸ்மார்ட் பிளக் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது அலெக்ஸாவுடன் இணைந்து செயல்படக் கூடிய ஸ்மார்ட் சாதனமாகும். இனி வெறும் வாய்ஸ் கண்ட்ரோலில் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து எலக்ட்ரிக் சாதனங்களையும் நீங்கள் இப்பொழுது எளிதாக கட்டுப்படுத்தலாம். இந்த புதிய ஸ்மார்ட் பிளக் ரூ.1999 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

அமேசானின் ஸ்மார்ட் பிளக்
அமேசானின் ஸ்மார்ட் பிளக்
  • (33) சியோமியின் மின்சார டயர் பம்பிங் சாதனம்

சியோமி எம்ஐ போர்ட்டபிள் எலக்ட்ரிக் ஏர் கம்ப்ரசர் (Mi Portable Electric Air Compressor) சாதனத்தை அறிமுகம் செய்தது. எம்ஐ போர்ட்டபிள் எலக்ட்ரிக் ஏர் கம்ப்ரசர் என்பது ஒரு மின்சார டயர் பம்பிங் சாதனமாகும் இந்த சாதனம் பைக் டயர்கள் மற்றும் சைக்கிள் டயர்களிலும் காற்று நிரப்புகிறது, இது 150 psi வரை அழுத்தம் கொடுக்கப்படலாம் மற்றும் கால்பந்து மற்றும் கார் டயர்களுக்கும் காற்று நிரப்பும் என்று கூறப்படுகிறது.

Mi Portable Electric Air Compressor
Mi Portable Electric Air Compressor
  • (34) காயத்தை குணப்படுத்தும் ஸ்மார்ட் பேண்டேஜ்

SMART BANDAGE-கள், சீன அறிவியல் அகாதமி மற்றும் சீன அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்துள்ளது. காயத்தில் பாக்டீரியாவின் வீரியம் எந்த அளவிற்கு உள்ளதோ அதற்கு ஏற்றவாறு இந்த பேண்டேஜ்கள் வேலை செய்யும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் பாக்டீரியாவின் தன்மைகேற்ப மூன்று வண்ணங்களில் மாறி காயங்களை குணமாக்கும் என்பது சிறப்பம்சமாக கருதப்படுகிறது. இந்த ஸ்மார்ட் பேண்டேஜ்களானது எலிகளின் மீதான ஆய்வுகள் மூலம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேண்டேஜ்கள் காயத்தை முற்றிலும் குணப்படுத்தும் வகையில் இருக்கும்.

ஸ்மார்ட் பேண்டேஜ்
ஸ்மார்ட் பேண்டேஜ்
  • (35) மேக்கப் போடும் ஆப்டே மந்திரக்கோல்

புரோக்டர் & கேம்பிள் நிறுவனம் உருவாக்கிய இந்த தொழில்நுட்பம், இங்க்ஜெட் பிரிண்டரைப் போலவே செயல்படுகிறது. இந்த கையடக்க சாதனம் முக குறைபாடுகளைக் கண்டறிந்து சரிசெய்ய அல்காரிதம் மற்றும் அச்சிடும் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உங்களது சரியான தோல் தொனியுடன் பொருந்தக்கூடிய சிறு மேக்கப் துகள்களை சருமத்தில் தடவுகிறது. இந்த ஆப்டே மந்திரக்கோல் மேம்பட்ட டிஜிட்டல் கேமரா மூலம் சருமத்தை ஸ்கேன் செய்கிறது. மேக்கப் போட அதிக நேரம் செலவிடவேண்டியதில்லை என்பதால் பெண்கள் மத்தியில் இதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

மேக்கப் போட உதவும் கருவி
மேக்கப் போட உதவும் கருவி
  • (36) நோக்கியா லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் நோக்கியா பிராண்டின் முதல் லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய லேப்டாப் 14 இன்ச் புல் ஹெச்டி ஸ்கிரீன், டால்பி விஷன், அல்ட்ரா வைடு பிக்சர் தரம், இன்டெல் ஐ5 10 ஆம் தலைமுறை குவாட்கோர் பிராசஸர், 8 ஜிபி ரேம், 512 ஜிபி NVMe SSD வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஹெட்போன்களுக்கு டால்பி அட்மோஸ் வசதி, விண்டோஸ் 10, ஹெச்டி ஐஆர் வெப்கேமரா, விண்டோஸ் ஹெலோ பேஸ் அன்லாக், பேக்லிட் கீபோர்டு, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பிரைட்னஸ், பிரெசிஷன் டச்பேட் மற்றும் பல்வேறு ஜெஸ்ட்யூர் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. நோக்கியா பியூர்புக் எக்ஸ்14 லேப்டாப் மேட் பிளாக் பினிஷ் கொண்டிருக்கிறது. இதன் முன்பதிவு ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.

  • (37) புத்தக பிரியர்களுக்காக எம்ஐ ரீடர் ப்ரோ இந்தியாவில் அறிமுகம்!

கடந்தாண்டு அறிமுகமான எம் ரீடர்-ஐ தொடர்ந்து சியோமி நிறுவனம் அதன் ப்ரோ மாடலை சீனாவில் அறிமுகப்படுத்தியது. அதிக பிக்சல் அடர்த்தி கொண்ட 7.8 இன்ச் அளவிலான டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது வழக்கமான தொலைபேசிகள் அல்லது டேப்லெட்களைப் போல கண்களுக்கான கடினத்தன்மையை ஏற்படுத்த கூடாது என்கிற நோக்கத்தின் கீழ் படிக்க ஏற்ற ஒரு e-Ink display உள்ளது. இது multiple file format-களையும் ஆதரிக்கிறது. இதன் விலை இந்திய மதிப்பின்படி கிட்டத்தட்ட ரூ.12,400 என நிர்ணயம் செய்துள்ளனர்.

  • (38) ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மாடல்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்தது. புதிய 2020 ஐபோன் மாடல்கள் ஏ 14 பயோனிக் SoC மூலம் இயக்கப்படுகின்றன. ஏ14 பயோனிக் சிப் ஆனது 4 கே வீடியோ எடிட்டிங் உள்ளிட்டவைகளை கையாளப்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேட்டரி ஆயுளைப் பொறுத்தவரை, இந்த இரண்டு மாடலும் 17 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்கும்படி மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்பிள் 12
ஆப்பிள் ஐபோன் 12 மாடல்
  • (39) புதிய 55-இன்ச் Mi TV அறிமுகம்

55 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா-எச்டி டிஸ்பிளே கொண்ட சியோமி மி கியூஎல்இடி டிவி 4 கே ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது, இதன் விலை ரூ.54,999 ஆகும். ஆண்ட்ராய்டு டி.வி மற்றும் பேட்ச்வால் கொண்டு இயங்கும் எம்ஐ கியூஎல்இடி டிவி 4 கே தான் இந்தியாவில் அறிமுகமாகி உள்ள சியோமி நிறுவனத்தின் முதல் கியூஎல்இடி டிவியாகும்.

  • (40) சூரியனின் மேற்பரப்பை வெளியிட்ட அமெரிக்கா

அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளை, அமைப்பு, சூரியனின் மேற்பரப்பை இதுவரை யாரும் எடுக்காத வகையில் துல்லியமான புகைப்படத்தை நவீன நுண்ணோக்கி மூலம் படம்பிடித்து வெளியிட்டு இருந்தது. இந்த தொலைநோக்கி படம்பிடித்துள்ள சூரியனின் படம்தான் மிக மேம்படுத்தப்பட்ட படமாகும். சூரியனின் மேற்பரப்பு தோற்றம் பார்ப்பதற்கு கடலைமிட்டாய் போல் உள்ளதாக நெட்டிசன்கள் அதை வைரலாக்கினர்.

சூரியனின் மேற்பரப்பு
சூரியனின் மேற்பரப்பு
  • (41) விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட்!

தகவல் தொடர்பு சேவைக்கான அதிநவீன சிஎம்எஸ் 1 செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் ஆறு உந்து சக்தியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் இதுவரை 41 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், சிஎம்எஸ் 1, விண்ணுக்கு செல்லும் 42ஆவது செயற்கை கோள்களாகும். 1400 கிலோ எடை கொண்டது இந்த சிஎம்எஸ் 1 செயற்கைக்கோள். இதன் ஆயுட்காலம் ஏழு ஆண்டுகளாகும். வானிலை பயன்பாடு மற்றும் நீட்டிக்கப்பட்ட c band அலைக்கற்றை தேவைகளுக்காகவே இந்த சிஎம்எஸ் 1 அனுப்பப்படுகிறது. தகவல் தொடர்புக்காக கடந்த 2011ஆம் ஆண்டு ஏவப்பட்ட ஜிசாட் 12 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் முடிந்துவிட்ட நிலையில், அதற்கு மாற்றாகவே சிஎம்எஸ் 1 தற்போது செலுத்தப்பட்டுள்ளது.

  • (42) ஆப்பிள் ஐபேடில் கேம் விளையாட ரூ.11 லட்சம் செலவிட்ட சிறுவன்

நியூயார்க்கைச் சேர்ந்த ஜெஸ்சிகா ஜான்சனுக்கு, ஜார்ஜ் ஜான்சன் என்ற 6 வயது மகன் உள்ளார். இந்த சிறுவன் ஜெஸ்சிகாவின் ஐபேடில் உள்ள சோனிக் போர்ஸ் என்ற கேம் விளையாடி அதில் வழங்கப்படும் கோல்டு காயின்ஸை பெறுவதற்கு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை செலவிட்டுள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக பணம் எடுக்கப்பட்டு மொத்தமாக இந்திய மதிப்பில் 11 லட்சம் வரை இழக்க நேரிட்டது. உடனடியாக நடந்தவிவரத்தை ஜெஸ்சிகா ஆப்பிள் நிறுவனத்திற்கு புகாராக தெரிவித்தார். ஆனால் இரண்டு மாதத்துக்கு மேல் சென்றுவிட்டதால் பணத்தை திருப்பித் தர முடியாது என கைவிரித்துவிட்டது ஆப்பிள் நிறுவனம்.

கேம் விளையாடி 11 லட்சத்தை விட்ட சிறுவன்
கேம் விளையாட 11 லட்சத்தை செலவிட்ட சிறுவன்
  • (43) கடன் ஆப்களை நீக்கிய பிளே ஸ்டோர்

ஊரடங்கு சமயத்தில் பலரும் கடனில் தவித்ததால் அப்ளிகேஷன் மூலம் கடன் வழங்கும் நடைமுறை இந்த ஆண்டு அதிகரித்து காணப்பட்டது. ஆனால் கடன் வாங்கி பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன என குற்றச்சாட்டு எழுந்ததால், பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எங்களது முதன்மை கொள்கை என்று முடிவெடுத்த கூகுள் நிறுவனம் Ok Cash, Go Cash, Flip Cash, ECash, SnapItLoan என ஐந்து அப்ளிகேஷன்களை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது.

  • (44) புதிய சோனி WF-H800 ஹெட்போன் அறிமுகம்

வயர் இல்லாத புதிய WF-H800 ஹெட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது சோனி நிறுவனம். சார்ஜிங் பாக்ஸ் வசதியுடன் வந்திருக்கும் இந்த ஹெட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 16 மணிநேரம் பயன்படுத்தலாம். அதாவது 10 நிமிடம் சார்ஜ் செய்தாலே 70 நிமிடங்கள் தாராளமாக பயன்படுத்த முடியும். ஹெட்செட்டில் 8 மணிநேரம் வரைக்கும் பயன்படுத்தக்கூடிய பேட்டரி வசதி இருக்கிறது. இதுதவிர சார்ஜிங் பாக்ஸில் 8 மணிநேரம் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளலாம்.

சோனி WF-H800
சோனி WF-H800
  • (45) அமெரிக்க விண்கலத்திற்கு கல்பனா சாவ்லா பெயர்

விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களைக் கொண்டுசெல்லும் கார்கோ விண்கலத்திற்கு கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிறந்த, நாசா விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் பெயரை அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான நார்த்ரூப் க்ரஹ்மான், என்ஜி - 14 சிக்னஸ் என்ற விண்கலத்திற்கு கல்பனா சாவ்லாவின் பெயரை சூட்டியது.

கல்பனா சாவ்லா
கல்பனா சாவ்லா
  • (46) காற்றை சுத்தப்படுத்தும் மாஸ்க்

காற்றை சுத்தப்படுத்தும் தொழில்நுட்பம் கொண்ட மாஸ்கை எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த மாஸ்கில் H13 HEPA காற்று வடிகட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தொழில்நுட்பம்தான் வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏர் புயூரிபயர்களில் பயன்படுத்தப்படுகின்றன. அணிந்திருப்பவரின் மூச்சு வேகத்துக்கு ஏற்ப செயல்படவும் இந்த மாஸ்க் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 8 மணி நேரத்திற்கும் அதிகமாக தாங்கக் கூடிய பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது.

காற்றை சுத்தப்படுத்தும் மாஸ்க்
காற்றை சுத்தப்படுத்தும் மாஸ்க்
  • (47) இந்த மூக்கு கண்ணாடியால பாக்க மட்டுமில்ல, பேசவும் செய்யலாம்!

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மூக்குக் கண்ணாடியை ஸ்மார்ட் மூக்குக் கண்ணாடியாக உருவாக்கியுள்ளது. இந்த ஸ்மார்ட் கண்ணாடியின் ஓரத்தில் குறைந்த ஒலி அளவு கொண்ட ஸ்பீக்கர்கள் உள்ளன. இதன் மூலம் பாடல்களை கேட்கலாம். அதேபோல் செல்போன் அழைப்புகளையும் கண்ணாடி மூலமே பேசிக்கொள்ளலாம். ஸ்மார்ட் கிளாஸ் என்றாலும் பார்வைக்கு இந்த வகை கண்ணாடிகள் சாதாரண மூக்குக் கண்ணாடிகளாகவே இருக்கின்றன. கண்ணாடியை எங்கேனும் மறந்து வைத்தாலும் ஒரு க்ளிக் மூலம் கண்டுபிடித்து விடலாம் என கண்ணாடியை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • (48) அரசியல் சார்பற்று இயங்குகிறோம் - பேஸ்புக்

இந்தியாவில் ஃபேஸ்புக் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. இதுதொடர்பாக நாடாளுமன்ற தொழில்நுட்பக் குழு விசாரணை செய்தது. இதுகுறித்து ஃபேஸ்புக் இந்திய துணைத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அஜித் மோகன் அளித்த விளக்கத்தில், “ஃபேஸ்புக் எப்போதும் திறந்த வெளியாகவும், ஒளிவு மறைவின்றியும், எந்த அரசியல் சார்பின்றியும் செயல்படுகிறது. ஃபேஸ்புக்கில் மக்கள் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக பதிவிடுகின்றனர் என்றார்.

  • (49) வரவேற்பை பெற்ற ஜூம் செயலி

கரோனா ஊரடங்கால் இந்த ஆண்டு பெரும்பாலனா ஆலோசனை கூட்டங்கள் ஜூம் (ZOOM) செயலி வாயிலாகவே நடைபெற்றது. இதுமட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளும் ஜூம் செயலியின் மூலமாகவே நடைபெற்றதால், பிளே ஸ்டோரில் இச்செயலியை டவுன்லோட் செய்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது.

  • (50) தனியாரும் இனி ராக்கெட்டுகளை செலுத்தலாம்!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து தனியார் ராக்கெட்டுகளை இனிமேல் தனியார் நிறுவனங்கள் விண்ணில் செலுத்தலாம். இதற்காக தொழில்நுட்ப உதவிகள் இஸ்ரோ சார்பில் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். விண்வெளி துறையில் தனியார் துறையை அனுமதிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில் இந்த தகவலை சிவன் தெரிவித்திருந்தார்.

இஸ்ரோ தலைவர் சிவன்

Last Updated : Jan 1, 2021, 8:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.