சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு கடந்து செல்லும்போது சூரியன் மறைக்கப்படும். அப்போது நிலவின் நிழலானது பூமியின் மேற்பரப்பின் மீது விழும். இதனைச் சூரிய கிரகணம் என்கிறோம்.
அதன்படி இன்று இந்தாண்டின் இரண்டாவதும், கடைசியுமான சூரிய கிரகணம், இன்று (டிச.14) நிகழவுள்ளது. இந்த கிரகணம் 2 நிமிடங்கள் 10 வினாடிகள் வரை முழுமையாக நிகழவுள்ளது. அது டிச.14ஆம் தேதி மாலை 7:03 மணிக்கு தொடங்கி டிச.15ஆம் தேதி நள்ளிரவு 12:23 மணி வரை நீடிக்கும்.
![நிலவின் ஒளிபடும் பகுதிகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9869625_l.jpg)
இதனை சிலி, அர்ஜென்டினா, தெற்கு அட்லாண்டிக், தென் பசிபிக் பகுதிகளிலிருந்து முழுமையாகக் காண முடியும். அதேபோல, தெமுகோ, வில்லாரிகா, சியரா கொலராடோ, அண்டார்டிகா, தென் அமெரிக்காவின் தெற்கில் உள்ளவர்களும் கிரகணத்தைக் காணலாம்.
ஆனால், இந்த கிரகணத்தை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான், பிஜி, மொரீஷியஸ், அரபு அமீரகம் மற்றும் பிற ஆசிய நாடுகளிலிருந்து காண முடியாது.
அதேபோல வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலும் காண இயலாது. முன்னதாக சூரிய கிரகணம் ஜூன் 21, 2020 அன்று நிகழ்ந்தது. அடுத்த சூரிய கிரகணம் 2021 ஜூன் 10ஆம் தேதி நிகழும்.
இதையும் படிங்க: சூரிய கிரகணம்: நேராக நின்ற உலக்கை!