இந்தியாவின் தேசிய விலங்கான புலிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாக பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள் நமக்கு தெரிவிக்கின்றன. அதனால் அதனைப் பேணிக்காக்க அரசு மட்டுமின்றி திரை பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மேற்கு வங்க மாநிலத் தலைநகரமான கொல்கத்தாவைச் சேர்ந்த ரதின்த்ரா தாஸ், அவர் மனைவி கீதாஞ்சலி ஆகியோர் புலிகளைக் காப்பது குறித்தான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த தங்களின் பைக்கில் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள தீர்மானித்து பிப்ரவரி 15ஆம் தேதி பயணத்தைத் தொடங்கினர். தங்களின் இந்த சுற்றுப்பயணத்திற்கு “ஜர்னி ஃபார் டைகர்” என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்த தம்பதி இதுவரை 28 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தற்போது எட்டாயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்து பயணித்து வருகின்றனர். இந்த சுற்றுப்பயணத்தின், தங்களின் நோக்கமான காடுகளை அழிவில் இருந்து காப்பாற்றுவது குறித்தும், அங்கு புலிகள் வாழ வேண்டிய முக்கியத்துவம் பற்றியும் பொதுமக்கள், பள்ளி மாணவர்களிடையே தம்பதி எடுத்துரைக்கின்றனர்.
மேலும் படிக்க: "உனக்காக என்னை பாதுகாக்கத்தான் வேண்டும் மனிதா..." - இப்படிக்கு புலிகள்!
மேலும் பார்க்க: சாலையில் ஹாயாக நடந்துசென்ற நான்கு புலிகள்!