ETV Bharat / bharat

மும்பை ஆரே காலனி மெட்ரோ கார் நிறுத்தம்;இடமாற்றத்திற்கான அறிவிப்பை வெளியிட்ட உத்தவ் தாக்கரே!

மும்பை ஆரே காலனி பகுதியில் உள்ள வனப்பகுதிகளை பாதுகாக்கும் வகையில் அப்பகுதியில் அமையவிருந்த மெட்ரோ பயணிகளுக்கான கார் நிறுத்தம் வேறு இடத்தில் மாற்றியமைக்கப்படும் என உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

Mumbai Metro car-shed relocated
மும்பை ஆரே காலனி மெட்ரோ கார் நிறுத்தம்;இடமாற்றத்திற்கான அறிவிப்பை வெளியிட்ட உத்தவ் தாக்கரே
author img

By

Published : Oct 11, 2020, 10:41 PM IST

மும்பை ஆரே காலனி பகுதியில் அமையவிருந்த மெட்ரோ ரயில் பயணிகளுக்கான கார் நிறுத்தம் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

"நாங்கள் கார் நிறுத்தத்தை கஞ்சுர்மார்க் பகுதியில் கட்ட முடிவுசெய்துள்ளோம். இதனால், அரசுக்கு எவ்வித கூடுதல் செலவும் ஏற்படப்போவதில்லை" என அவர் ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரிவித்தார்.

கடந்த மாதம் ஆரே பகுதியில் 600 ஏக்கரை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்துள்ள சூழ்நிலையில், இன்று கூடுதலாக 200 ஏக்கர் பரப்பளவை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அவர் அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

உத்தவ் தாக்கரேவின் இந்த அறிவிப்பின் மூலம் மகராஷ்டிராவின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி 130 சதுர கிலோ மீட்டரில் இருந்து 106 சதுர கிலோ மீட்டராக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: ஆரே பகுதியில் மரங்களை பாதுகாக்க உத்தவ் தாக்கரே அரசு முடிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.