நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் கந்தப்பா வீதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமைக் கட்டிடத்தை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கொடியை ஏற்றி திறந்து வைத்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன், கட்சி அலுவலகத்தின் கொடியை ஒரு தொண்டர்தான் ஏற்றி வைப்பதுதான் வழக்கம். அப்போதுதான் அந்தக் கட்சியையும் அந்த பகுதியையும் பாதுகாப்பாக பேணிக்காக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநிலக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற வேட்பாளருமான மருத்துவர் சுப்பிரமணியம் உடனிருந்தார்.