ETV Bharat / bharat

டெல்லியில் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் வேலுமணி சந்திப்பு!

சென்னை: டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழ்நாடு அமைச்சர் வேலுமணி சந்தித்துப் பேசியுள்ளார்.

minister velumani -nirmala seetharaman
author img

By

Published : Oct 23, 2019, 6:01 PM IST

உள்ளாட்சித் துறை சிறப்பாக செயலாற்றியதற்காக மத்திய அரசு தமிழ்நாட்டை கவுரவிக்கும் விதத்தில் விருது வழங்குவதாக அண்மையில் அறிவித்திருந்தது. அவ்விருதைப் பெற தான் டெல்லி செல்லவுள்ளதாக நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்திருந்தார்.

இதன்படி, விருதினைப் பெற சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து, டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை எஸ்.பி. வேலுமணி சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது, நகர்ப்புறம், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கவேண்டிய இரண்டாயிரத்து 29 கோடி ரூபாய் நிதியை அளிக்கவும் இயந்திர உற்பத்திப் பொருள்களின் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை ஐந்து விழுக்காடாக குறைக்கவும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோரிக்கைவிடுத்தார்.

Intro:Body:

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்திப்பு * நகர்ப்புறம், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கவேண்டிய ரூ.2,029 கோடி நிதியை வழங்கவும், இயந்திர உற்பத்தி பொருட்களின் ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்கவும் அமைச்சர் கோரிக்கை. #SPVelumani

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.