ETV Bharat / bharat

பாஜக புதிய தேசிய செயல் தலைவருக்கு தமிழிசை வாழ்த்து!

author img

By

Published : Jun 18, 2019, 7:48 PM IST

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜே.பி.நட்டாவை டெல்லியில் நேரில் சந்தித்து, தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்தார்.

tamilisai

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில், இமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த ஜே.பி. நட்டா அக்கட்சியின் தேசிய செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று ஜே.பி. நட்டாவை டெல்லியில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இது தொடர்பாக தமிழிசை வெளியிட்ட அறிக்கையில், 'ஜே.பி. நட்டா பாஜகவின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கபட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கட்சியில் உள்ள அவரது நீண்ட அனுபவமும், சுகாதாரத்துறை அமைச்சராகவும் கடந்த காலங்களில் இமாச்சல பிரதேச மாநில அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் பாஜக வளர்ச்சிக்கு மிகுந்த உறுதுணையாக இருக்கும். பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோரின் வழிகாட்டுதலும் கட்சியை மேன்மேலும் பலப்படுத்த உறுதுணையாக இருக்கும். த‌மிழ்நாடு பாஜக சார்பில் எனது மனமார்ந்த பாராட்டுகளும், வரவேற்புகளையும் தெரிவித்துகொள்கிறேன்’ என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Intro:Body:பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக கட்சியின் மூத்த தலைவர் ஜே.பி.நட்டா நேற்று பதவி ஏற்றார் .பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்ஸ் நிலையில் பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் இன்று டெல்லி சென்று வாழ்த்து தெரிவித்தார் .
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்:
J. P. நட்டா அவர்கள் பாஜகவின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறார் எ‌ன்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கட்சியில் அவரது நீண்ட அனுபவமும், ஈடுபாடும் சென்ற முறை ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராகவும் கடந்த காலங்களில் ஹிமாச்சல பிரதேச மாநில அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் உலகின் மிகப்பெரிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கும் மிகுந்த உறுதுணையாக இருக்கும். தொடர்ந்து அவருக்கு கிடைக்கும் மரியாதைக்குரிய திரு. அமித்ஷா அவர்களின் வழிகாட்டுதலும், மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் வழிகாட்டுதலும் கட்சியை மேலும் மேலும் பலப்படுத்த உறுதுணையாக இருக்கும். த‌மிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் எனது மனமார்ந்த பாராட்டுக்களும், வரவேற்புகளையும் தெரிவி்த்துகொள்கிறேன்...

இவ்வாறு தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார் Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.