மேற்குவங்கத்தில் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சியாக கூட இல்லாத பாஜக 18 தொகுதிகளில் வென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதற்கு பிறகு திருணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் பாஜகவில் இணைய உள்ளதாக அக்கட்சி தலைவர்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் திருணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் 50 கவுன்சிலர்கள் பாஜகவில் இன்று இணைந்துள்ளனர்.
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் பாஜக தேசிய செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். இதுகுறித்து கைலாஷ், "வாக்குப்பதிவு எப்படி ஏழு கட்டங்களாக நடைபெற்றதோ, அதேபோல் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி ஏழு கட்டங்களாக நடைபெறும்" என்றார்.