ETV Bharat / bharat

டெல்லி கலவரத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

டெல்லி கலவரத்தைக் கண்டித்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

Parliament premises
Parliament premises
author img

By

Published : Mar 2, 2020, 6:49 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்றுவந்த போராட்டத்தில் திடீரென்று வன்முறை வெடித்தது. இந்தக் கலவரத்தில் இதுவரை 46 பேர் உயிரிழந்தனர், மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதைக் கண்டித்து இன்று நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை அருகே திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்களில் கறுப்பு ரிப்பனை கட்டி, இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் 'இந்தியாவை காப்போம்', அமித் ஷா பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது குறித்து போராட்டத்தில் கலந்துகொண்ட திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா கூறுகையில், "டெல்லி காவல் துறையினர் கலவரத்தைக் கை கட்டி வேடிக்கைப் பார்தது. டெல்லி காவல் துறையினரின் செயலைக் கண்டிக்கும் வகையிலேயே இந்தப் போராட்டத்தை நடத்தினோம்" என்றார்.

இதையும் படிங்க: டெல்லி கலவரம் எதிரொலி - நாடாளுமன்றத்தில் கடும் அம
ளி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.