இது குறித்து அபிஷேக் பானர்ஜி சார்பாக அவரது வழக்கறிஞர் வெளியிட்டிருந்த அறிக்கையில், கொல்கத்தா டைமண்ட் ஹாலில் பாஜக சார்பில் நடைபெற்ற பரப்புரையின்போது பிரதமர் மோடி அபிஷேக் குறித்து தவறாகவும், ஆதாரமற்ற புகார்களையும் தெரிவித்துள்ளார். இது அபிஷேக்கின் நன்மதிப்பை சீர்குலைப்பதாக இருக்கிறது.
மேலும், 36 மணி நேரத்துக்குள் பிரதமர் மோடி அபிஷேக் பானர்ஜியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவில்லை என்றால் மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மே 15ஆம் தேதி கொல்கத்தாவின் டைமண்ட் ஹாலில் நடைபெற்ற பாஜக பரப்புரையின்போது பிரதமர் மோடி, வெளியூர் ஆட்கள் மேற்கு வங்கத்திற்கு வர மம்தா முட்டுக்கட்டை போடுகிறார் என்றும், மேற்கு வங்க மாநிலம் மம்தா, அவருடைய மருகனுடையதல்ல (அபிஷேக் பானர்ஜி) எனவும் சாடி பேசியிருந்தார்.