ETV Bharat / bharat

திருப்பதியில் ஜூன் 10 முதல் பக்தர்களுக்கு அனுமதி

author img

By

Published : Jun 5, 2020, 7:01 PM IST

திருப்பதி: கரோனா பரவல் பீதியால் விதிக்கப்பட்ட தடைக்குப் பின்னர், திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் பொது மக்கள் தரிசனம் செய்ய ஜூன் 10ஆம் முதல் அனுமதிக்கப்படவுள்ளனர்.

Tirumala Tirupathi temple darshan
Tirumala Tirupathi temple

உலகில் பணக்கார கடவுள் என்றழைக்கப்படும் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் தேவஸ்தானத்தில் ஜூன் 8, 9 ஆம் தேதிகளில் பணியாளர்களும், ஜூன் 10 ஆம் தேதி உள்ளூர் மக்களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளனர். இதைத்தொடர்ந்து, மற்ற பகுதியினர் அனைவரும் ஜூன் 11ஆம் தேதி முதல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

கரோனா தொற்று பரவாமல் இருக்க பக்தர்களின் கூட்டம் அதிகமாவதைத் தடுப்பதற்கும், தனிப்பட்ட இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக திருப்பதி திருமலை தேவஸ்தான அறக்கட்டளையின் தலைவர் ஓய்.வி. சுப்பா ரெட்டி கூறியதாவது, "ஒவ்வொரு நாளும் 60 முதல் 70 ஆயிரம் வரையிலான பக்தர்கள் திருமலையில் வழக்கமாக தரிசனம் மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது 6 முதல் 7 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்படவுள்ளனர். ஒரு மணி நேரத்தில், 500 பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ளலாம். காலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை தரிசனம் நடைபெறும்.

65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு உட்பட்டவர்கள் கண்டிப்பாக அனுமதி இல்லை. அதேபோல் நோய் கட்டுப்பாடு பகுதியிலிருந்து வருபவர்களும் அனுமதிக்கப்படமாட்டர்கள்" என்றார்.

இதைத்தொடர்ந்து, திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஏ.கே. சிங்கால் கூறியதாவது, "நாளொன்றுக்கு 3 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்கப்படும். அந்த டிக்கெட்டுகளை பெறுபவர்கள் கீழ் திருப்பதியிலுள்ள அலிபிரியில் வைத்து சோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் அனுமதிக்கப்படுவர்.

ஜூன் மாதத்துக்கான மொத்த ஆன்லைன் டிக்கெட்டுகளும், ஜூன் 8ஆம் தேதி விற்பனை செய்யப்படும். மேலும், 3 ஆயிரம் தரிசன டிக்கெட்டுகள் அலிபிரி சோதனை சாவடியில் தினமும் விற்கப்படும். கோயிலுக்குத் தரிசனத்துக்கு வரும் ஒவ்வொரு பக்தர்களுக்கும் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

தேவைப்பட்டால் கரோனா சோதனையும் எடுக்கப்படும். பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக, 6 அடி தனிப்பட்ட இடைவெளியை உறுதி செய்ய வேண்டும். ஜூன் 11ஆம் தேதி முதல் காலை 6.30 முதல் 7.30 வரை என, ஒரு மணி நேரம் விஐபி தரிசனம் அனுமதிக்கப்படும்.

வாகனங்கள் அனைத்து அலிப்பிரி சோதனை சாவடியில் வைத்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, திருமலைக்கு அனுமதிக்கப்படும். நடைபாதை மூடப்பட்டுள்ளதால் நடைபாதை தரிசனம் கிடையாது. பக்தர்கள் யாரும் உண்டியல்களை தொட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மூலிகை கிருமி நாசினி பக்தர்களுக்கு வழங்கப்படும். குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களுக்கே அன்ன பிரசாதம் வழங்கப்படும். அதேபோல் விருந்தினர் இல்லங்களில் பக்தர்கள் தங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு மேல் அனுமதி இல்லை. ஒவ்வொரு விருந்தினர் இல்லத்திலும், இருவர் மட்டுமே தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர்.

தனியார் விடுதிகள் திருமலையில் மீண்டும் திறக்க அனுமதியில்லை. கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதை கருத்தில்கொண்டு சில நடைமுறைகள் நிறுத்தப்படுகின்றன. மேலும், பக்தர்கள் மொட்டை அடித்துக்கொள்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக, கடந்த மார்ச் 19ஆம் தேதி முதல் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மாதந்தோறும் சுமார் 200 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்திருப்பதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தற்போது கோயிலுக்கு வரவேண்டிய வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதால், இங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கான சம்பளம் தருவதிலும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.