ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீபகலமாக பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல்கள் நடைபெற்றுவருகின்றன. இந்தச் சூழ்நிலையில் அம்ஷிபோரா பகுதியில் ஏற்பட்ட மோதலில் பயங்கரவாதிகள் மூவர் கொல்லப்பட்டனர். முன்னதாக, அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் இருவர் குல்காம் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 17) சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில், ஒருவர் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று ராணுவத்தினர் தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து பேசிய ஜம்மு- காஷ்மீர் ஏடிஜி, பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வழிகாட்டுதல்களைப் பெற்று தாக்குதல்களை மேற்கொள்கின்றனர் என்றார்.
மேலும், இந்த மோதலில் மூன்று ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தினரால் காஷ்மீர் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: குல்காம் மாவட்டத்தில் பயங்கராவதி ஒருவர் சுட்டுக்கொலை!