உத்தரப் பிரதேச மாநில ஹார்டோய் மாவட்டத்தில் பில்கிராம்-கன்னோஜ் நெடுஞ்சாலையில் உள்ள பார்சோலா கிராமத்தில் நேற்று (ஜூன்-12) விபத்து நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து காவலர்கள் கூறுகையில், “வீர் சிங் என்பவர் நான்கு குடும்ப உறுப்பினர்களோடு உறவினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக டிராக்டரில் மலேராவுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த டிரக் ஒன்று டிராக்டரில் மோதியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும் ரூபி சிங் (34), அவரது இரண்டு மகள்கள் கோம்தி (13), அஞ்சலி (4) ஆகியோர் சிகிச்சையின் போது உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்” என்றனர்.