காஷ்மீரின் தெற்கு பகுதியின் புல்வாமா அருகேவுள்ள சேவா உலர் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி தீடீரென்று துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இது குறித்து காஷ்மீர் ஐஜி விஜய் குமார் கூறுகையில், "இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இரண்டு பாதுகாப்புப் படையினருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது" என்றார்.
இத்தாக்குதலில் உரியிழந்த பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இருப்பினும், உரியிழந்த மூவரும் அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் இளைஞர்கள் என்பதும் சமீபத்தில்தான் அவர்கள் பயங்கரவாத குழுக்களில் இணைந்தார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
தெற்கு காஷ்மீர் பகுதியில் ஜூன் மாத்தில் மட்டும் 12 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 33 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், பாதுகாப்புக் காரணங்களுக்காக ஜம்மூ காஷ்மீர் பகுதியில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'காங்கிரஸ், சீனா இடையே ரகசிய உறவு'- ஜே.பி. நட்டா