ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா பகுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்பில் இருப்பவர்கள், பயங்கரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி, இந்த சோதனை நடைபெற்றது.
இதில், முஜீப் ஷமாஸ், தன்வீர் அகமது, இம்தியாஸ் அகமது என்ற மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள், லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் பாகிஸ்தான் கொடிகளை ஏற்றி தேச விரோத எண்ணங்களை விதைக்க முயற்சித்ததாகவும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அவர்கள் மீது பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். அவர்கள் மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், அவர்களிடமிருந்து கிரனேட் குண்டுகள், பயங்கர ஆயுதங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரஷ்யாவின் கரோனா தடுப்புமருந்து இந்தியாவில் சோதனை!