கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்று பேரும் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹோஸ்பெட் நகரில் வசிப்பவர்களாவர்.
கடந்த இரண்டு நாட்களாக, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் அம்மாநில சுகாதாரத்துறை அலுவலர்கள் வைத்துள்ளனர்.
வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் வசித்து வந்த ஹோஸ்பெட் நகர் பகுதியில், தற்போது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும் என்று காவல்துறை துணை ஆணையர் எஸ்.எஸ். நகுல் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கோவிட்-19: 100 கோடி ரூபாய் அளித்த இன்போசிஸ் பவுண்டேசன்