மேற்கு வங்க மாநிலம், ஜார்கிராம் மாவட்டத்தில் உள்ள பின்பூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கியதில் 3 யானைகள் பலியாகின. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த யானைகளை அப்பகுதி மக்கள் கனத்த இதயத்தோடு கண்ணீர் மல்க பார்த்துச் செல்கின்றனர். உயிர்கள் எதுவாயினும், இழப்பு என்று வரும்போது அனைவரும் சற்று கலங்கிப்போவது இயல்புதானே!