ETV Bharat / bharat

கால்வாயில் கார் சரிந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் மரணம் - தெலுங்கானாவில் கால்வாயில் கார் சரிந்து விபத்து

தெலங்கானா: ஹைதராபாத்திற்கு வந்துகொண்டிருந்த கார் நிலைதடுமாறி கால்வாயில் சரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.

Three drowns as car plunged into Telangana canal

author img

By

Published : Feb 27, 2020, 7:43 PM IST

தெலங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்தில் ஏ.எம்.ஆர்.பி. இணைப்பு கால்வாயில் கார் சரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் ஒர்சு ரங்கையா, அவரது மனைவி அலிவேலு, அவரது மகள் கீர்த்தி என அடையாளம் காணப்பட்டது. கார் சரிந்த சம்பவத்தில் ஒர்சு ரங்கையாவின் மகன் காப்பாற்றப்பட்டு அப்பகுதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காலையில் ஹைதராபாத்தை நோக்கி ஒர்சு ரங்கையாவின் குடும்பத்தினர் காரில் வந்துகொண்டிருந்தனர். ஏ.எம்.ஆர்.பி. இணைப்புக் கால்வாய் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததனால் கால்வாயில் கார் சரிந்துள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காரிலிருந்த சிறுவனை மீட்டனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடல்களை மீட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: டெல்லி வன்முறை எதிரொலி: பொதுத்தேர்வு தேதியில் மாற்றம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.