ETV Bharat / bharat

தத்தெடுத்த சிறுவனைக் குடும்பத்தினரே கொலைசெய்த கொடூரம்! - கர்நாடக தற்போதைய செய்தி

பெங்களூரு: தத்தெடுக்கப்பட்ட சிறுவன் முதுமை நோயால் (dementia) பாதிக்கப்பட்ட காரணத்தினால், அச்சிறுவனைத் தத்தெடுத்த குடும்பத்தினரே ஈவு இரக்கிமின்றி கொலைசெய்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

child with dementia killed
child with dementia killed
author img

By

Published : Jul 7, 2020, 3:16 PM IST

Updated : Jul 7, 2020, 4:57 PM IST

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில்தான் இந்தக் கொடூரம் அரங்கேறியுள்ளது. அந்தக் கிராமத்தில் வசிக்கும் ஸ்வர்ணலதா என்பவர் குழந்தை இல்லாத காரணத்தினால் போலி ஆவணங்களைத் தயார்செய்து, சுமார் இரண்டு லட்சம் ரூபாய் பணம் செலவழித்து அச்சிறுவனைத் தத்தெடுத்துள்ளார்.

பின்னர் சிறிது நாள்கள் கழித்து, அச்சிறுவனின் உடல்நிலையில் மாற்றம் தெரிந்ததையடுத்து, அருகிலிருந்த மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறு வயதிலேயே முதுமை அடைந்ததைப் போன்று தோற்றமளிக்கும் dementia என்ற நோயால் அச்சிறுவன் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனால், ஸ்வர்ணலதாவின் மாமனார் ராமு சவுகலே, இந்தக் குழந்தை நமக்கு வேண்டாம் என்றும், அவனைக் கொன்றுவிடலாம் என்றும் பிடிவாதமாகத் தெரிவித்துள்ளார். பின்னர், மருத்துவர் மாருதி முசாலே, அவரது மனைவி ரேகா முசாலே ஆகியோரின் உதவியுடன் அச்சிறுவனைக் கொன்று, தங்களுக்குச் சொந்தமான இடத்தில் புதைத்துள்ளனர்.

இதுகுறித்து கர்நாடக மாநில பெண் மற்றும் குழந்தைகள் நலத்துறை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள சிக்கோடி காவல் துறையினர் இரண்டு மருத்துவர்களையும், குழந்தை கொல்ல யோசனை அளித்த ஸ்வர்ணலதாவின் மாமனார் ராமு சவுகலேயும் கைதுசெய்துள்ளனர்.

இதையும் படிங்க: '6 ஆண்டுகளில் 9 பெண்கள்' - மேற்குவங்க ஆட்டோ சங்கருக்கு தூக்கு

Last Updated : Jul 7, 2020, 4:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.