மக்களவையில், வரும் 5ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில நிதியமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சார்பில் துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார். இக்கூட்டத்தில் வறட்சி பாதித்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், வறட்சியை சமாளிக்க தமிழ்நாட்டில் சிறப்புத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், அதற்காக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டுமெனவும் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.