உத்தரப் பிரதேச மாநிலம் அலிகரில் உள்ள 'சச்சா நெரு மதர்சாவில்' ஆறு முதல் 12 வயதிற்குட்பட்ட ஆறு மாணவர்களுக்கு தற்காப்பு கலைகளுக்கான பயிற்சி கொடுக்கப்பட்டு வருகின்றது. ஆறு மாணவர்களும் ராஜஸ்தான் மாநிலம், ஆல்வர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் பெற்றோர்களும் வெவ்வேறு இடத்தில் நடைபெற்ற வன்முறையில் உயிரிழந்து விட்டனர்.
வடமாநிலங்களில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகம் நடைபெறுகிறது. அதிலிருந்து தற்காத்து கொள்ள ஆறு மாணவர்களுக்கும் சிறப்பான முறையில் பயிற்சி அளித்து வருகின்றனர்.
மேலும் தற்காப்புக் கலைகளை கற்றுத்தரும் பயிற்சியாளர் கூறுவதாவது, பெற்றோர்களை இழந்து அதே மனநிலையில் இருக்கும் குழந்தைகளை, அந்த துயர சம்பவத்திலிருந்து மீட்பதற்காக இது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மேலும் ஆறு குழந்தைகளும் தற்காப்பு கலைகளான குத்துச்சண்டை, கிக் பாஃசிங், கராத்தே உள்ளிட்டவை கற்றுத்தரப்படுகிறது. மற்ற மாணவர்களைக் காட்டிலும் இவர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
இதையும் படிங்க: ஒளிப்பதிவாளரைத் தாக்கி செல்போன் பறித்த வழிப்பறி கும்பல்!