புதுச்சேரி மாநில அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவக்கல்வியில் 10% இட ஒதுக்கீடு அறிவித்ததற்காக, முதலமைச்சர் நாராயணசாமியை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ” வரும் நவம்பர் 6 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை, தமிழ்நாடு பாஜக சார்பில் வேல் யாத்திரை நடக்கவுள்ளது. இது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மதக்கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தில் மதக்கலவரத்தை துவக்க பார்ப்பதன் மூலம், அதிமுக அரசின் தலை மீது பாஜக கை வைத்துள்ளது.
எனவே, தமிழக டிஜிபிக்கு பாஜகவின் யாத்திரை தொடர்பாக மின்னஞ்சல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மிக மோசமான முறையில் நடந்து வரும் பாஜகவினரின் அராஜகத்தை கண்டித்து, சென்னையில் மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.
மேலும், ஏற்கனவே திட்டமிட்டபடி மகளிர் பரப்புரையும் நடத்தப்படவுள்ளது “ என்றார். உடன் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சி விவசாயிகளாலேயே விரட்டி அடிக்கப்படும் - மு.க.ஸ்டாலின்