பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர், தாய்லாந்து நாட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு, ஆசியான், கிழக்கு ஆசியா மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு உச்சிமாநாடுகளில் கலந்துகொள்கிறார். இந்த மாநாடு மூன்று நாட்கள் நடக்கிறது.
தாய் மொழியில் திருக்குறள்
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர்கள் மத்தியில் நடந்த விழாவில், தாய்லாந்து மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட திருக்குறளை வெளியிட்டார். இதையடுத்து வணக்கம், நமஸ்கார் என தனது உரையை தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, “தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு” என்ற திருக்குறளையும் மேற்கோள் காட்டி பேசினார்.
('ஒருவன் தன்முயற்சியினால் சேர்த்த பொருட்கள் (செல்வம்) தக்கவருக்கு உதவி செய்யவே தன்னிடம் வந்தது என எண்ண வேண்டும்' என்பதே இதன் பொருள்.)
புனித நூல்
திருக்குறள் ஒரு புனித நூல். 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்த வரிகள், இன்றளவும் பொருத்தமாக உள்ளன. மனித குலத்துக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு திருக்குறள்.
இந்தியா- தாய்லாந்து மக்கள் ஒருவருக்கொருவர் மொழியின் அடிப்படையில் மட்டுமல்ல, உணர்வுகளிலும் மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். நீங்கள் 'சவஸ்தி மோடி' என்று சொன்னீர்கள். இதற்கு சம்ஸ்கிருத வார்த்தையான 'ஸ்வஸ்தி' என்பதோடு தொடர்பு உள்ளது. இதற்கு `நலன்' என்பது அர்த்தம்.
இந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், வரலாற்றில் முதல் முறையாக 60 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர். இது உலகெங்கிலும் உள்ள ஜனநாயக நாடுகளில் மிகப்பெரிய சம்பவம். ஒவ்வொரு இந்தியரும் அதில் பெருமைப்பட வேண்டும் என்றார்.
தீவிரவாதம், பிரிவினைவாதம் அகற்றம்
தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தின் மூலக்காரணங்களில் ஒன்றை சமீபத்தில் மத்திய அரசு அகற்றியது. நாம் ஒரு சரியான முடிவு எடுக்கும்போது அதற்கு உலகம் முழுவதும் இருந்து ஆதரவு குரல்கள் எதிரொலிக்கும்.
தாய்லாந்திலும் அதைப் பார்க்க முடிகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியதும், அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினர் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். அப்போது, “இது தனிநபருக்கான பாராட்டு கிடையாது, இந்திய நாடாளுமன்றத்துக்கும் அதன் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சேரவேண்டிய பாராட்டு” என்றார்.
பொருளாதார வளர்ச்சி
இதையும் படிங்க: தாய்லாந்தின் புதிய அரசராக முடி சூடினார் வஜ்ராலங்கோர்ன்