கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் நடவடிக்கையாக புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கரோனா வைரஸ் குறித்து பல்வேறு இடங்களில் சமூக அமைப்பினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி பூக்கள் அமைப்பைச் சேர்ந்த திருநங்கைகள், விழித்தெழு தமிழன் மாணவர் இளைஞர் பேரவை உள்ளிட்ட சமூக அமைப்புகள் சார்பில் புதுச்சேரி பேருந்து நிலையம் அருகே உள்ள பேருந்து, ஆட்டோ, டெம்போக்களுக்கு கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.
மேலும், பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் சென்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளித்தனர்.