ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த புகழ் பெற்ற மலையேற்ற வீராங்கனையும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பிரேம்லதா அகர்வாலின் வீட்டிலிருந்து, அவர் வாங்கிய விருதுகள், வெள்ளி நாணயங்கள் ஆகியவை அடையாளம் தெரியாத நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன.
மேலும், அவர் பயன்படுத்தி வந்த கணினி பாகங்களும் 20 ஆயிரம் ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளன.
இது குறித்து பேசிய பிரேம்லதாவின் கணவர் விமல் அகர்வால் ”வெளியூர் சென்ற நாங்கள் திங்கட்கிழமை அதிகாலை ஐந்து மணியளவில் வீடு திரும்பினோம். அப்போது வீட்டின் கதவுகளும் ஜன்னல் கதவுகளும் உடைந்து சிதறிக் கிடந்தன. திருடர்கள் வென்டிலேட்டர் வழியாக உள்ளே சென்று திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓபிசி இட ஒதுக்கீடு: மத்திய அரசு அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவு