தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள எர்ரகட்டா அரசு மருத்துவமனையில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் ஜூன் 24ஆம் தேதி கரோனா தீநுண்மி பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து அவர் ஜூன் 26ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் நேற்று அவர் குறித்த காணொலி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்தக் காணொலி உயிரிழப்பதற்கு முன் அந்த இளைஞர், தனது தந்தைக்கு அனுப்பினார். அதில், "மருத்துவர்கள் எனக்கு அளிக்கப்பட்ட வென்டிலேட்டர் இணைப்பை அகற்றிவிட்டனர், ஆக்சிஜன் கிடைக்கவில்லை, என்னால் மூச்சு விட முடியவில்லை என மூன்று மணி நேரமாக வென்டிலேட்டர் கேட்டேன். ஆனால் மருத்துவர்கள் அளிக்கவில்லை. நான் போகிறேன் பை பை அப்பா" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதையடுத்து அவரது தந்தை இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, அப்படி ஏதும் நடக்கவில்லை என மருத்துவமனை கண்காணிப்பாளர் மஹ்பூப் கான் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா சிகிச்சைக்கான கட்டணம்: வழிகாட்டுதல்களை வெளியிடும் தெலங்கானா!