ETV Bharat / bharat

’ஒரே நாடு ஒரே மொழி’ அமல்படுத்தும் திட்டம் இல்லை: அமித் ஷாவை எதிர்க்கும் மத்திய இணை அமைச்சர்? - one nation one language

’ஒரே நாடு ஒரே மொழி’ திட்டத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆதரவாகப் பேசியிருந்த நிலையில், அத்திட்டத்தை அமல்படுத்தும் நோக்கம் மத்திய அரசுக்கு இல்லை என்று உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.

there is no proposal to implement the one nation one language scheme, says minister kishan reddy
author img

By

Published : Nov 21, 2019, 1:20 PM IST

உள்துறை அமைச்சர் அமித் ஷா ’ஒரே நாடு, ஒரே மொழி’ என்ற திட்டத்தை அமல்படுத்துவது குறித்து கடந்த செப்டம்பர் மாதம் பேசினார். அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலுள்ள கட்சிகளும் அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்நிலையில், இது தொடர்பாக நேற்று மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, “நமது அரசியலமைப்புச் சட்டம், அனைத்து மொழிகளுக்கும் சம உரிமையை வழங்கியுள்ளது. மேலும், பொதுப்பட்டியலில் மொழி உள்ளதால், அது குறித்து முடிவெடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

எனவே, ’ஒரே நாடு ஒரே மொழி ’ திட்டத்தை அமல்படுத்துவதற்கான முகாந்திரம் எதுவுமில்லை. மொழியை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களுக்கு மனிதவள மேம்பாட்டுத் துறையின் நிதி ஒதுக்கப்படுவதில்லை” என்றார்.

இதையும் படிங்க: ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உடன் ஆதாரை இணைக்கத் திட்டமா? - மத்திய அரசின் பதில் என்ன தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.