ETV Bharat / bharat

'வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பில்லை' - ருத்ரா சவுதரி

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்திய பயணத்தின் போது, இருநாட்டுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு சாத்தியமில்லை என்று கார்நெகி இந்தியாவின் இயக்குநர் ருத்ரா சவுதரி ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Feb 17, 2020, 1:39 PM IST

Trump visit, ட்ரம்ப்  மோடி
Trump visit

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் முதல் இந்திய பயணத்துக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், இருநாட்டுக்கும் இடையே சிறிய அளவிலான வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள இருதரப்பினரும் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

வர்த்தகம் மட்டுமே இருதரப்பு உறவுகளை முடிவு செய்திடாது என்று கூறும் வெளியுறவுக் கொள்கை ஆராய்ச்சி அமைப்புமான 'கார்நெகி இந்தியா' இயக்குநர் ருத்ரா சவுதரி, வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படுவது சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

வர்த்தக உறவை சாத்தியமாக்க பிரமதர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்பை நேரடியாக அணுக வேண்டும் என கருதும் அவரிடம், மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா ஷர்மா பேசுகையில், இருதரப்பு உறவில் உள்ள சவால்கள், சிக்கல்கள், ட்ரம்ப் வருகையின் மூலம் உருவாகியுள்ள எதிர்பார்ப்பு, ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகளுடன் இந்தியாவுக்குள்ள நெருக்கமான உறவு, காஷ்மீர் விவகாரம், சிஏஏ, என்ஆர்சி, இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் சீனாவை எதிர்கொள்ள வகுக்கும் வியூகங்கள் குறித்து விரிவாக பேசினார்.

அந்தப் பேட்டியை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

1. டொனால்டு ட்ரம்ப் வருகையின் முக்கியத்துவமும், எதிர்ப்பார்ப்புகளும் என்னென?

எந்த ஒரு அமெரிக்க அதிபரின் இந்தியா வந்தாலும், அது வரலாற்று முக்கியத்துவம் பெறும். பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிறகு கடைசியில் அவர் இந்தியாவுக்கும் வருகிறார். டெல்லி, அகமதாபாத்தில் இரு நாள்கள் தங்குகிறார்.

பொதுமக்கள் பங்கு பெறும் பிரமாண்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதுதரப்பு உறவுகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு அமையும். எந்த நாடாக இருந்தாலும், அமெரிக்கா உடனான உறவு மேம்பட இப்போதும், எப்போதும் தலைவர்களின் சந்திப்பு மிக முக்கியமானது.

இந்தத் தருணத்தில் இந்தியாவுடனான உறவை பேண, அமெரிக்கா நினைப்பது நல்ல விஷயம். அந்த உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ட்ரம்ப் இறங்கி வந்துள்ளார்.

2. இன்னும் சில மாதங்களில் அமெரிக்காவில், தேர்தல் நடைபெறுகிறது. ட்ரம்ப் பலமானவராகத் தெரிகிறாரா அல்லது பிற அதிபர்களைப் போல பதவி காலத்தின் இறுதி கட்டத்தில் பலம் இழந்து விட்டாரா?

பிற அமெரிக்க அதிபர்களைப் போல ட்ரம்பைக் கருதி விட முடியாது. அவருடைய இயல்பான பலத்துடன் தான் இருக்கிறார். அவருக்கு எதிரான பதவி நீக்க விசாரணையைத் தொடர்ந்து, மிக முக்கியமான காலகட்டத்தில் இந்தியா வருகிறார். பதவி நீக்க விசாரணை குறித்து, இந்திய ஊடங்களில் பெரியளவில் செய்திகள் வெளியாகவில்லை.

அமெரிக்க அதிபருக்கு எதிராகப் பதவி நீக்க விசாரணை நடத்தப்படுவது, உலக வரலாற்றிலேயே பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. பதவி நீக்க விசாரணையை எதிர்கொண்ட பிறகு, ட்ரம்ப் இந்தியா வர முடிவு செய்திருப்பது சுவாரஸ்யமாக உள்ளது. இந்தியா, பிரதமர் நரேந்திர மோடியுடனான உறவுக்கு ட்ரம்ப் தனிபட்ட முக்கியத்துவம் கொடுப்பதையே, இது காட்டுகிறது.

3.ட்ரம்ப்பின் பல கருத்துகள் இந்தியாவை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளன. இது ட்ரம்ப் யார் என்பதையே காட்டுகிறது. முக்கியமற்ற விஷயங்களில், ட்ரம்பின் கருத்துகளைப் புறக்கணிப்பது இந்தியாவுக்கு நல்லதா?

வர்த்தக ஒப்பந்தம் முக்கியமான பிரச்னைதான். ஆனால், வியூக ரீதியிலான உறவில், அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கக்கூடாது. ட்ரம்ப் அமெரிக்க அதிபரானது, அமெரிக்காவுக்கு மிட்டுமல்ல, இந்தியாவுக்கும் ஏன் ஒட்டு மொத்த உலகத்துக்கே அதிர்ச்சியாக இருந்தது.

தன் தேர்தல் பரப்புரையின் போது, வர்த்தகம் குறித்து ட்ரம்ப் தான் அளித்திருந்த வாக்குகள் பலவற்றை நிறைவேற்றியுள்ளார். இதனால், இந்தியாவும் பாதிப்புக்குள்ளானது.

அலுமினியம், இரும்பு, சிறப்பு வர்த்தக அந்தஸ்து (Generalized System of Preferences - GSP) உள்ளிட்டவற்றில் ட்ரம்ப் மேற்கொண்ட எல்லா நடவடிக்கைகளும், இந்தியாவை பாதித்தன. வர்த்தக உறவுகளை மேற்கொள்ளும் போது, நாம் கவனமாக இருக்க வேண்டும்.

அமெரிக்க அதிபர் இந்தியா வந்தாலும், சிறியளவிலான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவுதான். இந்த விஷயங்களைப் பொருத்தவரை ட்ரம்ப்பை விட, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியான ராபர் லைட்திஸர் முரண்டு பிடிக்கிறார்.

4.எண்ணெய், எரிவாயு, பாதுகாப்பு உபகரணங்கள் அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்குவது நம் பற்றாக்குறையை போக்குமா? ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை மறுபரீசிலனை செய்வார்களா.. இந்த வர்த்தக ஒப்பந்தங்களால் பெரிய மாற்றம் நிகழுமா.. தொழில்துறைக்கு இந்த ஒப்பந்தத்தில் கொடுக்கப்படும் இடம் என்ன ?

வர்த்தக ஒப்பந்தங்களைப் பொருத்தவரை, ராபர்ட் லைட்திஸர்தான் தனிப்பட்ட முறையில் முக்கிய முடிவுகளை எடுப்பார். அவருக்கு இந்த விஷயத்தில் 30 வருட அனுபவம் உண்டு. கடந்த 1980, 90-களில் அலுமினியம் போன்ற செமிகண்டக்டர்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள், விலைகளைப் பார்க்க வேண்டும்.

விலை நிர்ணயமும், தடைகளும் அமெரிக்கா முழுவதுமே பிரச்னையாகவே இருக்கிறது. பொதுவாகவே, அமெரிக்காவில் அலுமினியம், இரும்பு, விவசாயம் உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு இருந்து வருகிறது. இந்தியாவின் கண்ணோட்டத்தில் அமரிக்கா உடனான உறவை வர்த்தகம், வியூகம், பாதுகாப்புத் துறை என பிரித்துப் பார்த்தால், உறவின் முக்கியப் பிடிமானமே பாதுகாப்புத் துறை சார்ந்ததது தான்.

அமெரிக்காவுடன் எப்போதெல்லாம் பேசுகிறோமோ, அப்போதெல்லாம் பெரிய அளவிலான பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்கள் அல்லது அணு ஆயுத ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியா, அமெரிக்கா இடையேயான அணு ஆயுத ஒப்பந்தம் இனிமேல் நல்ல வடிவத்தை பெறப் போவதில்லை. ஆகையால், ட்ரம்பின் வருகையால் கிடைக்கவிருக்கும் பலன் குறித்த எதிர்ப்பார்ப்பை குறைத்து கொள்ள வேண்டும்.

இந்த வருகையின் போது வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாது என்பது குறித்து நல்ல அறிகுறிகள் தென்படுகின்றன. அதே போன்று ட்ரம்பின் வருகையில் முக்கியத்துவம் இல்லாமல் போய் விடாமல் இருப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். பாதுகாப்புத்துறையை பொருத்தவரை, உலகம் முழுக்க தொழில்நுட்பத்தின் புதிய பரிமாணங்கள் காணப்படுகின்றன. இதுகுறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் (R&D Hubs) அமைப்பது குறித்து இந்தியாவும், அமெரிக்காவுக்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.

5.இந்தியா அமெரிக்காவுக்கு இடையே ஏற்பட்ட ராணுவத் தளவாட பரிமாற்ற ஒப்பந்தத்தில் (LEMOA) கையெழுத்திடப்பட்ட விஷயங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறதா ?

அது மிகவும் மெதுவான நடைமுறை. 2005ஆம் ஆண்டை பின்நோக்கிப் பார்த்தால், இரு அரசுகளுமே பாதுகாப்பு துறையில் இணைந்து செயல்படுவதின் அவசியத்தை உணர்ந்திருந்தன. இருநாட்டு பாதுகாப்பு விதிகள், கொள்கைகள், தரம் சம்பந்தப்பட்டவை.

இதனால், இந்திய-அமெரிக்க பாதுகாப்பு துறைகளில் பெரிய மாற்றம் நிகழும். லெமோவா ஒப்பந்தம் பற்றி, இன்னும் நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன.

அமெரிக்கா-இந்நியா இடையேயான Defense Technology and Trade Initiative (DTTI) ஒப்பந்தத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பும் நல்ல முறையில் பணிகளை மேற்கொள்வதில் சரியானப் புரிந்தலைக் கொண்டுள்ளன.

பாதுகாப்புத் துறையில் மெதுவாகவே இணக்கம் ஏற்படும். சுரங்கத்தின் தொடக்கத்தில்தான் இருக்கிறோம். வெளியே வந்தால்தான் வெளிச்சத்தை காண முடியும்.

6.ரஷ்யாவிடம் இருந்து 400 மில்லியன் அமெரிக்க டாலர் விலையில் வாங்கவுள்ள ஏவுகணை குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் இடம் பெறுமா?

ஆயுதத்துக்கு ரஷ்யா, எண்ணெய்க்கு ஈரான். இதுபோன்ற விவகாரங்கள் எப்போதும் பேச்சுவார்த்தை நடத்தி, இந்திய அரசு தீர்வு காண வேண்டியவை. இந்திய தரப்பில், இப்போது அமெரிக்கா உடனான உறவை பேணுவதில் நாம் தேர்ந்த முதிர்ச்சியை பெற்றுள்ளோம். அமெரிக்காவால் பொருளாதார தடை விதிக்கப்பட்ட நாடுகளுடன் நாம் உறவை பேணுகிறோம்.

ஈரானுக்கு விதிக்கப்பட்ட பொருளதார தடை காரணமாக, கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட விலை உயர்வு நம்மையும் பாதித்தது. இருப்பினும், ஈரான், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடனான உறவை நாம் பேணியே வருகிறோம். இது சமகால சிக்கல்களைச் சமாளிப்பதற்கான கருவி.

வரலாற்று ரீதியாகக் கணிக்க முடியாத அமெரிக்காவின் முடிவுகளை, நாம் சரியாகவே கையாண்டுள்ளோம். இந்தத் தருணத்தில் எதையும் கணித்து விட முடியாது. ஆனால், இந்திய அணுகுமுறையைப் பார்க்கும் போது தந்திரமாகச் செயல்பட்டு ட்ரம்பிடம் இருந்து பெற வேண்டியதை பெற்று விட வேண்டுமென்றே நான் நினைக்கிறேன்.

7.டோக்லாம் விவகாரத்துக்கு பிறகு சீனா, ரஷ்யாவுடனான உறவை இந்தியா புதுப்பித்துக் கொண்டது. இது அமெரிக்க நிலைபாட்டின் மீதான அவநம்பிக்கையினாலே அது மேற்கொள்ளப்பட்டதா? ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளவுள்ள சமாதான திட்டத்துக்காக, பாகிஸ்தானை மகிழ்ச்சியில் வைத்திருக்க நினைக்கும் ட்ரம்பின் முடிவுக்கு கொடுக்கப்படும் ராஜ தந்திர பதிலடியா?

டோக்லாம் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடும் என்று நிச்சயம் நினைக்கவில்லை. அந்தச் சமயத்தில் அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கைகள் இந்தியாவின் செயல்பாடு நியாயமனது என்கிற வகையிலேயே இருந்தன. சீனாவுடன் நேருக்கு நேர் முட்டிக் கொண்ட இந்தச் சமயத்தில், அதாவது 2017ஆம் ஆண்டில் அங்கே 100-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் இருந்தனர்.

சீனா-பூடான் எல்லையை ஒட்டியுள்ள அந்தப் பகுதியில் 100 சீன ராணுவ வீரர்களும் மல்லு கட்டினர். அந்தத் தருணத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பை நாம் அனுமதிக்கவில்லை. அமெரிக்காவின் தலையீடு இல்லாமலேயே பிரச்னை சுமூகமாகத் தீர்ந்தது.

டோக்லாம் விவகாரம், இந்தியா-அமெரிக்கா உறவில் பாதிப்பை ஏற்படுத்தியதாக நான் உணரவில்லை. பாகிஸ்தான் விஷயத்தில் ட்ரம்ப் தனக்கென்று ஒரு வழியை பின்பற்றுகிறார். இம்ரான் கான், வாஷிங்டனுக்கு பயணம் மேற்கொள்ளும் போது இரு ராக்ஸ்டார்கள் சந்தித்து கொள்வது போலத்தான் இருக்கும்.

இருவரும் ஒருவரையொருவர் ஈர்க்க முயல்வார்கள். ஆனால், ட்ரம்புக்குள் பாகிஸ்தானுக்கு எதிரான போக்கு இருக்கவே செய்யும். முக்கியமாகப் பயங்கரவாத விவகாரங்களில். பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி திரட்டியதாக ஹபீஸ் சயீத் சிறை தள்ளப்பட்டுள்ளார்.

இது எல்லாம் அழுத்தத்தின் அடிப்படையில் நடந்த விஷயமே. இது நல்ல செய்திதான். இதே போன்று பலவற்றை நாம் முன்னரே பார்த்தாயிற்று. அமெரிக்கா உடன் இம்ரான்கான் நல்ல உறவை பேணி வந்தாலும், அந்த நாட்டுக்கு தரும் அழுத்தத்தை அமெரிக்கா செய்து கொண்டுதான் இருக்கும்.

8. அமெரிக்க நாடாளுமன்றத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து தீர்மானம் இயற்றவிருப்பது முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. ட்ரம்புக்கு மிக நெருக்கமான லிண்ட்ஸே கிரஹாம் உள்ளிட்ட நான்கு செனட்டர் (மேல் சபை) உறுப்பினர்கள் அமெரிக்க உள்துறை செயலர் மைக் பாம்பியோவுக்கு காஷ்மீர் விவகாரம், சிஏஏ, என்ஆர்சி குறித்து கடிதம் எழுதியுள்ளனர். ட்ரம்ப் உடனான பேச்சுவார்த்தையின் போது இந்த விவகாரங்கள் பேசப்படுமா ?

அமெரிக்காவில் உள்ள இந்திய அலுவலர்கள், எப்போதும் அமெரிக்க நாடாளுமன்றத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் வேறுபாடுகள் இருப்பதாகத் தகவல்கள் வந்தாலும், அவற்றை தாண்டி இந்திய அலுவலர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்துடன் பல விதங்களில் நேர்மையான முறையில் பிரச்னைகள் குறித்து அவ்வப்போது பேசியிருக்க வேண்டும். இது நல்ல யுக்தியா என்றால் ஆம் என்பேன்.

தற்போதைய இந்தியா குறித்து அமெரிக்க நாடாளுமன்றதுக்கு பல சந்தேகங்கள் உள்ளன. சில சமயங்களில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லது அவ்வாறு கருதாமலும் போகலாம். இதுவும் உண்மைதான். ஆனால், மோடிக்கும், ட்ரம்புக்கும் இடையே இது முக்கியப் பிரச்னையா என்றால் நிச்சயமாக இல்லை என்பேன்.

'நான் ஒரு கணிக்க முடியாதவன், சிந்தனை குறைவான மனிதர்' என்று, ட்ரம்ப் மோடிக்கு உணர்த்தவும் செய்யலாம். அமெரிக்காவிலும் இந்த முறைதான் ட்ரம்புக்கு வெற்றி தேடி கொடுத்தது. 'இது எல்லாம் ஒரு பிரச்னையே அல்ல' என்று ட்ரம்ப் மோடியிடம் கூறக் கூடும்.

ட்ரம்ப் ஒரு அஜெண்டாவுடன் இந்தியா வரவுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு கடிதம் எழுதிய லிண்ட்ஸே கிரஹாம் உட்பட யாரும் மோடியுடன் ட்ரம்ப் என்ன பேச வேண்டுமென்பதை தீர்மானிக்க முடியாது.

9.மக்களுக்கு இடையேயான உறவுகள் என்று பார்த்தால், ட்ரம்ப் அடிக்கடி குடியேற்ற சீர்திருத்தங்கள் பற்றி பேசுகிறார். இந்தியா ஹெச்-1பி விசா குறித்து யோசிக்கிறது. இப்போது அதன் நிலை என்ன?

இதுதான் உண்மையான விவகாரம். குடியேறிகள் குறித்து ட்ரம்ப்பின் விமர்சனமாக மட்டும் இதனைப் பார்த்து விட முடியாது. இந்திய தொழிலாளர்களை வெகுவாகப் பாதிக்கும் செயல் இது. ஹெச்1-பி விசா விவாகரத்தில் கணிக்க முடியாத காரணிகளால், மக்கள் அடையும் இழப்புகள் குறித்து அனைவருக்கும் தெரியும். அதுவும் இந்தியர்களுக்கு இது மிக முக்கியமான பிரச்னை.

என் பார்வையில், இந்த விஷயத்தை அலுவலக மட்டத்திலேயே விவாதித்து தீர்க்கலாம். ட்ரம்பின் இந்த வருகை, உறவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். ராபர்ட் லைட்திஸர் வழியாக ட்ரம்பிடம் வேண்டுகோள் வைக்கலாம். அதன்மூலம் இந்தியா, அமெரிக்காவுக்கு இடையேயான சிறிய அளவிலான வர்த்தக ஒப்பந்தம் என்றால் என்னவென்பது குறித்து தெளிவாக அவரை சிந்திக்க வைக்கலாம்.

10. இந்தோ-பசிபிக் பகுதியில் நடந்துள்ள முக்கிய மாற்றங்கள் இந்தியாவின் செயல்பாடு குறித்து அமெரிக்காவின் நிலைபாடு என்ன ?

இந்த விஷயத்தில் இந்தியா-அமெரிக்கா இணைந்து செயல்படுகின்றன. அமெரிக்கா இந்த விவகாரத்தை அதிகமாகப் புரிந்து வைத்துள்ளது. கடந்த இரு வருடங்களாக, இந்தியாவின் ராஜதந்திரம் இந்த விஷயத்தில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.

அமெரிக்க பாதுகாப்புத்துறையின் வரைபடத்தில் இந்தோ-பசிபிக் பகுதி கிடையாது. இந்தோ, இந்தியா பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பகுதி இது. இங்குள்ள உண்மையானப் பிரச்னைகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். கடல்சார் பயிற்சிகள், கடல் வளம், பொருளாதார ஒருங்கிணைப்பு, ராணுவ நடவடிக்கைகள் இந்தப் பகுதியைச் சுதந்திரமாக உருவாக்க உதவிக்கரமாக அமையும். ஆனால், அது இன்னும் நடைபெறவில்லை.

இந்தோ-பசிபிக் பகுதியை தவிர, அண்டைநாடுகள் மீதும் நாம் கவனம் கொள்ள வேண்டும். சீனா பற்றி நீங்கள் முன்னரே கேள்வி எழுப்பினீர்கள். சீனாவுடன் ராஜ தந்திர உறவுகளில் இணைந்தோ அல்லது நடைமுறைக்கு சாத்தியமான இரு தரப்பு உறவுகளில் இணைந்து இந்தியா செயல்பட வேண்டும். போர்த் திறன் சார்ந்த பிரச்னைதான் இந்தோ-பசிபிக் பகுதியில் நிலவும் முக்கியப் பிரச்னை. இந்தப் பிரச்னையை தீர்க்க, ராஜ தந்திர ரீதியிலாக செயல்பட்டால், நான்கு பக்கமும் அழுத்தம் குறைந்து விடும்.

இதையும் படிங்க : 'இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது' - ட்ரம்ப்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.