ETV Bharat / bharat

கடல் அழகை ரசிக்கமுடியவில்லை - அறையை காலி செய்த தெலங்கானா முதலமைச்சர்! - chandrashekar rao

கன்னியாகுமரி: கடல் அழகை ரசிக்க முடியவில்லை எனக் கூறி தான் தங்கியிருந்த ஓட்டல் அறையை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் திடீரென மாற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தெலங்கானா முதலமைச்சர் குடும்பத்தினர்
author img

By

Published : May 9, 2019, 1:27 PM IST

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு நேற்று பிற்பகலில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குடும்பத்தினருடன் வருகை தந்தார். கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் அவர் அறை எடுத்து தங்கியிருந்தார். மாலை நேரத்தில் குடும்பத்தினருடன் முக்கடல் சங்கமம், கடற்கரை சன்செட் பாயிண்ட் போன்ற பகுதிகளுக்கு சென்று கடல் அழகை ரசித்ததோடு, சூரிய அஸ்தமனத்தையும் கண்டு களித்தார்.

இந்நிலையில், விடுதிக்குத் திரும்பிய அவர், தான் தங்கியிருந்த அறையில் இருந்து கடல் அழகை ரசிக்க முடியவில்லை என கூறியதோடு, உடனடியாக அறையை மாற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார். பின்னர் அவரது வேண்டுகோளை ஏற்ற அதிகாரிகள், உடனடியாக கேரள அரசின் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதியில் தங்க ஏற்பாடுகளைச் செய்தனர். இதையடுத்து, கன்னியாகுமரியில் இருந்து தனது அறையை காலி செய்து விட்டு குடும்பத்துடன் கேரளவிற்கு சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அறையை காலி செய்யும் தெலங்கானா முதலமைச்சர் குடும்பம்

மேலும், நாளை காலை கேரளவில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, ராமநாதபுரம் செல்கிறார். 10ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும், 11ஆம் தேதி ஸ்ரீரங்கம் கோயிலிலும் சாமி தரிசனம் செய்கிறார்.

Intro:கன்னியாக்குமரிக்கு வருகை தந்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டல் சரியில்லை என கூறியதை அடுத்து திடீரென கேரள அரசின் தங்கும் விடுதிக்கு மாறியதால் பரபரப்பு

Body:கன்னியாக்குமரிக்கு வருகை தந்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டல் சரியில்லை என கூறியதை அடுத்து திடீரென கேரள அரசின் தங்கும் விடுதிக்கு மாறியதால் பரபரப்பு

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் குடும்பத்தினருடன் வருகை தந்தார். அவருக்கு கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நட்சத்திர ஓட்டலில் ரூம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .அங்கு வந்தவர் மாலை நேரத்தில் குடும்பத்தினருடன் முக்கடல் சங்கமம் கடற்கரை சன்செட் பாயிண்ட் போன்ற பகுதிகளுக்கு சென்று கடல் அழகை ரசித்தார். சூரிய அஸ்தமனத்தைக் கண்டு களித்தார். கடற்கரையில் குடும்பத்துடன் உற்சாகத்தோடு சுற்றுலாவை கொண்டாடினார் .இந்நிலையில் ரூமிற்கு திரும்பிய பிறகு கடல் அழகை ரசிக்க முடியவில்லை என கூறிய அவர் உடனடியாக ரூமை மாற்ற வேண்டும் எனக் கூறினார். கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ள எனக்கு கண்டிப்பாக கடல் அழகை ரசித்தவண்ணம் கடல் தெரியும் விதம் உள்ள ரூம் ஏற்பாடு செய்யும்படி அதிகாரிகளையும் பாதுகாப்பு அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டார். எனவே அவர்களின் வேண்டுகோளை ஏற்று அதிகாரிகள் உடனடியாக கேரள அரசின் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதியில் ஏற்பாடுகளைச் செய்தனர். உடனடியாக ஒரு குடும்பத்தினருடன் ரூமை மாற்றிக்கொண்டார். முதலமைச்சர் சுற்றுலா வந்த இடத்தில் திடீரென ரூமை மாற்றியதால் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நாளை அவர் காலை பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார் பின்பு நாளை 9ஆம் தேதி ராமநாதபுரம் செல்கிறார். 10ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். 11ஆம் தேதி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.பின்னர் அவர் அங்கிருந்து சென்னை மூலம் ஹைதராபாத் செல்கிறார் .

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.