இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,
இந்தியாவில் அரசியலமைப்பு சட்டம் இயற்றி 70ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இதனால் அதை மிக விமர்சையாக கொண்டாட மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. அதன் பேரில், அனைத்துக் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வரும் நவம்பர் 26ஆம் தேதி அது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். அந்த நிகழ்ச்சிகளில் முக்கிய சட்டப்பிரிவில் ஒன்றான அடிப்படை கடமைகளைக் குறித்து விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
அடுத்த ஒராண்டு காலம் வரை கல்லூரிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளை நாடாளுமன்றத்தின் வாளாகத்தில் மாணவர்களை கொண்டு அதனை நேரடியாக ஒளிப்பரப்பு செய்ய முயற்சிக்க வேண்டும்.
அரசியலமைப்பு சட்ட முன்னுரை (constitution preamble) பற்றியும் கல்லூரிப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்களைக் கொண்டு மாணவர்களிடம் உரையாற்ற வேண்டும். இதையடுத்து அந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கண்காணித்து ஊக்கப்படுத்தும் விதமாகவும் பல்கலைக்கழக மானியக் குழு சார்பாக ஒரு இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் கல்லூரி நடத்தும் நிகழ்ச்சிகள் வெளியாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்டை ஏவும் தேதி மாற்றம்