இளம் கேப்டன் சவுரப் கலியா மற்றும் பிற ஐந்து வீரர்களை சித்திரவதை செய்து சிதைக்கப்பட்டதில் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான செயல் வெளிப்பட்டது.
கேப்டன் சவுரப் கலியா குறித்த சில தகவல்கள்
கேப்டன் சவுரப் கலியா பஞ்சாபின் அமிர்தசரஸைச் சேர்ந்தவர், மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய தேர்வின் மூலம் இந்திய ராணுவ அகாடமிக்கு தேர்வு செய்யப்பட்டு 1998ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்டார். 1999 ஜனவரியில் போர் வெடிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு கார்கில் பகுதியில், ஜாட் ரெஜிமென்ட் 4ஆவது பட்டாலியனில் அவரது முதல் பணியிடம் அமைந்தது,
22 வயதில் பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களால் போரில் கொல்லப்பட்ட முதல் ராணுவ அலுவலர் இவர்.
நிகழ்வுகள் - ஒரு பார்வை
- மே 15, 1999 அன்று, கேப்டன் சவுரப் கலியாவும் மேலும் ஐந்து வீரர்களும் மரங்களில்லாத லடாக் மலைகளில் உள்ள கக்சர் துறையில் பஜ்ரங் போஸ்ட்டில் வழக்கமான ரோந்துக்கு சென்றிருந்தனர்.
- இரு தரப்பு படையினருக்கும் இடையே தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடு நடக்கும் அளவிற்கு நிலைமை மோசமானது. ஆனால், இறுதியில், அவரும் அவரது படையினரும் வெடிமருந்து தீர்ந்ததால் ஓடினர், அவர்கள் பாகிஸ்தான் ரேஞ்சர்களின் படைப்பிரிவால் சூழப்பட்டு, இந்திய படைகள் அவர்களை அடைவதற்குள் உயிருடன் பிடிக்கப்பட்டனர்.
- அவர்கள் மூன்று வாரங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர் என்பது 1999 ஜூன் 9 அன்று பாகிஸ்தான் ராணுவத்தால் திருப்பி அனுப்பப்பட்ட உடல்களிலிருந்து தெரிந்தது.
சித்ரவதை செய்திருப்பது உடற்கூறாய்வில் தெரியவந்தது
கைதிகளின் உடல்களில் சிகரெட்டுகளால் சூடு வைப்பது, செவிப்பறைகளை சூடான கம்பிகளால் துளைப்பது, கண்களை அகற்றுவதற்கு முன் அவற்றை துளைத்தல், பற்களையும் எலும்புகளையும் உடைத்தல், மண்டை ஓடுகளை உடைத்தல், உதடுகளை வெட்டுவது, மூக்கை வெட்டுவது, வீரர்களின் கைகால்கள் மற்றும் அந்தரங்க உறுப்புகளை வெட்டுவது, கடைசியில், (நெற்றியில் காணப்பட்ட துப்பாக்கி குண்டு காயங்களால்) அவர்களை சுட்டுக் கொல்வது போன்றவை மூலம் பாகிஸ்தானியர்கள் தங்கள் கைதிகளை சித்ரவதை செய்திருப்பது உடற்கூறாய்வில் தெரியவந்தது. இறப்புக்கு முன்னரே காயங்கள் ஏற்பட்டிருந்தன என்பதை உடற்கூறாய்வு உறுதிப்படுத்தியது.
தந்தை நீதிக்காக போராடுகிறார், ஆனால் 21 ஆண்டுகளுக்குப் பிறகும் நீதி இன்னும் கிடைக்கவில்லை
- அக்டோபர் 1999 அப்போதைய ராணுவத் தலைவர் ஜெனரல் வி.பி. மாலிக் கலியாவின் வீட்டிற்குச் சென்று இந்திய அரசுடன் இந்த பிரச்னையை பேசுவதாக உறுதியளித்தார். ஆனால் பின்னர் கலியாவின் தந்தையிடம், இந்த முக்கியமான பிரச்னை இரு நாடுகள் சம்பந்தப்பட்டது என்றும், இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA), பிரதமர் அலுவலகம் (PMO) அல்லது பாதுகாப்புத்துறை அமைச்சகம் (MOD) ஆகியவற்றால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று ராணுவம் கூறியது
- நான் வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA), பிரதமர் அலுவலகம் (PMO) மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஆகியவைக்கு மனு தாக்கல் செய்தேன்
- புதிய டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மூலம் 1999-ல் பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டது, ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை.
- 2001 ஆக்ரா உச்சிமாநாட்டிற்கு முன்னதாக அப்போதைய பாகிஸ்தானின் அதிபராக இருந்த ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் உடன் 10 நிமிடம் சந்திக்க கோரிக்கை விடுத்தேன், ஆனால் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
- தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை அணுகும்போது, இதுபோன்ற பிரச்னைகளில் செயல்பட அதற்கு அதிகாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. நான் ஆயுதப்படை தீர்ப்பாயத்தை அணுகியபோது, இந்த பிரச்னையை பாகிஸ்தானுடன் பேசுகிறோம் என்று தெரிவித்தது.
- எனது வேண்டுகோளுக்கு இந்திய குடியரசு தலைவரிடமிருந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த விவகாரம் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என்ற ஒரு பொதுவான பதில் மட்டுமே கிடைத்தது.
- 2012ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
அரசாங்கத்தின் பதில்கள்
- இந்த விஷயத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை அணுகுவது 'நடைமுறை' அல்ல என்று நரேந்திர மோடி அரசு தெரிவித்துள்ளது. கேப்டன் கலியாவின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் சர்வதேச விசாரணை கோரியதை அடுத்து மத்திய அரசின் இந்த பதில் வந்துள்ளது.
- பாகிஸ்தான் அதை அனுமதிக்காது என்பதால் சர்வதேச நீதிமன்றத்தை அணுக முடியாது என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி தனது ஆட்சிக் காலத்தில் கூறியது. இது ஒரு இருதரப்பு பிரச்னை. மேலும் "இருதரப்பு அல்லது உள்நாட்டு" விஷயத்தில் சர்வதேச நீதிமன்றத்தின் தலையீடு இருக்கக்கூடாது என்ற தனது நிலையை இந்தியா கடைபிடிக்கிறது.
மோசமான வானிலை காரணமாக கேப்டன் கலியாவும் அவரது வீரர்களும் இறந்துவிட்டதாகவும், அவர்களின் உடல்கள் ஒரு குழியில் கண்டெடுக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் பத்திரிகையாளர் மரணம்: பாஜக அரசை விளாசும் பிரியங்கா காந்தி