புதுச்சேரி மாநிலத்தில் காவலர் தேர்வு கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நடத்தப்படவில்லை. இதற்கிடையே இத்தேர்வில் வயதுவரம்பு தொடர்பாக தளர்வு கேட்டுப் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
மேலும், துணைநிலை ஆளுநர், தலைமைச் செயலர் ஆகியோர் தனது அதிகாரத்தின் மூலம் காவலர் தேர்வு நடப்பதை தடுத்து நிறுத்துவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால், புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் தலைமையில், புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு காவலர் தேர்வுக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் புதுச்சேரி நகரப் பட்டியலின மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் உள்ளிட்ட அமைப்பினர் கலந்துகொண்டு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக சங்கு ஊதி, மணியடித்தது, மலர்த்தூவி போராட்டம் நடத்தினர்.