காற்றில் பறக்கும் வெள்ளை மாளிகை என்றழைக்கப்படும் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம், அமெரிக்க அதிபரை உலகின் எந்த மூலைக்கும் அழைத்துச் செல்கிறது.
அமெரிக்க அதிபர், அமெரிக்க கலாசாரத்தின் அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஏர் ஃபோர்ஸ் ஒன், அது எங்கு பறந்தாலும் அதன் மறுக்க முடியாத இருப்பைக் குறிக்கிறது. 'யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா', அமெரிக்கக் கொடி, அமெரிக்க அதிபரின் முத்திரை ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அந்த விமானம், அதிபர் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பயணம் செல்ல எப்போதும் தயாராக இருக்கும்.
ஏர் ஃபோர்ஸ் ஒன் நடுவானில் எரிபொருள் நிரப்பும் திறன்கொண்டது. மேலும் மின்காந்த அலைகளைத் தாங்கும் வகையில் விமானத்தில் மின்னணுவியல் உள்ளது. உள்ளே அமைக்கப்பட்டிருக்கும் மேம்பட்ட பாதுகாப்பான தகவல் தொடர்பு உபகரணங்கள், அமெரிக்கா மீது தாக்குதல் நடந்தால் விமானம் மொபைல் கட்டளை மையமாக செயல்படும்வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
ஏர் ஃபோர்ஸ் ஒன் மூன்று நிலைகளில் 4,000 சதுர அடி அளவைக் கொண்டுள்ளது, இதில் ஒரு அதிபருக்கான தனி அறை, ஒரு பெரிய அலுவலக அறை, மாநாட்டு அறை, அதிபருடன் வருபவர்களுக்கான அறைகள் உள்ளன. இது தவிர, ஒரு தனி மருத்துவருடன் கூடிய மருத்துவ அறையும் உள்ளது. இந்த விமானத்தில் இரண்டு உணவகங்கள் உள்ளன. அங்கு ஒரே நேரத்தில் 100 பேருக்கு உணவளிக்க முடியும்.
தொலைதூர இடங்களுக்கு பயணிக்கும்போது தேவைப்பட்டால் அதிபருக்குச் சேவைகளை வழங்குவதற்காக பல சரக்கு விமானங்கள் இந்த விமானத்திற்கு முன் பறந்துசெல்லும்.
வெள்ளை மாளிகை ராணுவ அலுவலகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அதிபரின் விமானப்படைக் குழு, ஏர் ஃபோர்ஸ் ஒன்னை பராமரித்து இயக்குகிறது.
இதையும் படிங்க: உலகின் மிகப் பெரிய மைதானத்தில் உலகின் சக்திவாயந்த் நபர்!